உறுதி தன்மை இல்லாத கட்டிடங்கள் இடிக்கப்படும் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேட்டி


உறுதி தன்மை இல்லாத கட்டிடங்கள் இடிக்கப்படும் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேட்டி
x
தினத்தந்தி 23 Oct 2017 1:30 AM IST (Updated: 23 Oct 2017 1:30 AM IST)
t-max-icont-min-icon

உறுதி தன்மை இல்லாத கட்டிடங்கள் இடிக்கப்படும் என்று அமைச்சர் ஓ.எஸ். மணியன் கூறினார்

நாகப்பட்டினம்,

தமிழகத்தில் 50 ஆண்டுகள் பழமையான கட்டிடங்கள் ஆய்வு செய்யப்பட்டு, உறுதி தன்மை இல்லாத கட்டிடங்கள் இடிக்கப்படும் என்று அமைச்சர் ஓ.எஸ். மணியன் கூறினார்.

நாகையில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாகை மாவட்டம் பொறையாறில் அரசு போக்குவரத்து கழக பணிமனை கட்டிடம் கடந்த 20-ந்தேதி அதிகாலை இடிந்து விழுந்து கண்டக்டர்-டிரைவர்கள் உள் பட 8 பேர் உயிரிழந்துள்ள னர். இந்த சம்பவம் வருத்தம் அளிக்கிறது. இனிமேல் இதுபோன்ற விபத்துகள் ஏற்படாமல் தடுக்க தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்கு மேல் உள்ள பழமையான கட்டிடங்கள் ஆய்வு செய்யப்படும். இதில் உறுதி தன்மை இல்லாத கட்டிடங்கள் உடனே இடிக்கப்படும்.

மேலும், புராதான கட்டிடங்கள் கட்டிட கலை நிபுணர்களை கொண்டு பராமரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படும். அனைத்து அரசு கட்டிடங்களும் ஆய்வு செய்யப்படும். வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு அனைத்து அரசு துறை அலுவலர்களும் தயார் நிலையில் உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறி னார்.

Next Story