காஞ்சீபுரத்தில் உள்ள மதுராந்தகம் ஏரி நிறைந்தது; 21 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
காஞ்சீபுரத்தில் உள்ள மதுராந்தகம் ஏரி நிறைந்த நிலையில் 21 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரத்தில் பாசன பகுதிகள், குடிநீர் தேவை உள்ளிட்ட பொதுமக்களின் பயன்பாட்டிற்காக உள்ள மதுராந்தகம் ஏரியில் மழையால் நீர் நிறைந்துள்ளது.மதுராந்தகம் ஏரியின் மொத்த கொள்ளளவான 23.30 அடியில் நீரானது 20.50 அடியை எட்டியுள்ளது. இதனால் ஏரியில் இருந்து கிளியாற்றில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
இதனை அடுத்து கத்திரிச்சேரி, விமுதமங்கலம், முன்னூத்திகுப்பம், முருக்கச்சேரி, தச்சூர் உள்ளிட்ட வலது கரை கிராமங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதேபோன்று மலைப்பாளையம், கருங்குழி, தோட்டநாவல், மேட்டுக்காலனி, இருசாமநல்லூர் உள்ளிட்ட இடது கரை கிராமங்களுக்கும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ஏரி நிரம்பிய நிலையில் அப்பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஆற்றில் வெள்ளம் செல்லும் நிலையில் அதனை பொதுமக்கள் வேடிக்கை பார்க்கவோ, புகைப்படம் எடுக்கவோ வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story