சென்னை கொடுங்கையூரில் சீரமைப்பு பணிகள்; 2வது கட்ட ஆய்வு செய்கிறார் முதல் அமைச்சர் பழனிசாமி


சென்னை கொடுங்கையூரில் சீரமைப்பு பணிகள்; 2வது கட்ட ஆய்வு செய்கிறார் முதல் அமைச்சர் பழனிசாமி
x
தினத்தந்தி 5 Nov 2017 1:00 PM IST (Updated: 5 Nov 2017 1:00 PM IST)
t-max-icont-min-icon

சென்னை கொடுங்கையூரில் மேற்கொள்ளப்படும் சீரமைப்பு பணிகளை பற்றி முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2வது கட்ட ஆய்வு செய்து வருகிறார்.

கொடுங்கையூர்,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் நிரம்பி போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், கொடுங்கையூரில் மழை வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்பினை சீரமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதனை முதல் அமைச்சர் பழனிசாமி நேற்று முன்தினம் முதற்கட்ட ஆய்வு செய்துள்ளார்.

இந்நிலையில், கொடுங்கையூரில் மேற்கொள்ளப்படும் சீரமைப்பு பணிகளை 2வது கட்ட ஆய்வு செய்வதற்காக முதல் அமைச்சர் பழனிசாமி சென்றுள்ளார்.

அந்த பகுதியில் மீண்டும் மழை வந்தால் பாதிப்பு ஏற்படாத வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டால் உடனடியாக அதனை சரி செய்ய அறிவுறுத்தியுள்ளார்.


Next Story