கமல்ஹாசனை கைது செய்ய வேண்டும் கமிஷனர் அலுவலகத்தில் புகார்


கமல்ஹாசனை கைது செய்ய வேண்டும் கமிஷனர் அலுவலகத்தில் புகார்
x
தினத்தந்தி 5 Nov 2017 3:56 PM IST (Updated: 5 Nov 2017 3:55 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் பிரிவினையை உண்டாக்க கமல் நினைக்கிறார் என கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது.


சென்னை,


நடிகர் கமல்ஹாசன் மீது சென்னையைச் சேர்ந்த தேவராஜன் என்பவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.
புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

நடிகர் கமல், ‘என்னுள் மையம் கொண்ட புயல்’ என்ற தொடரை எழுதி வருகிறார். அதில், “எங்கே ஒரு இந்து தீவிரவாதியை காட்டுங்கள் என்ற சவாலை இனி அவர்கள் விட முடியாது. அந்த அளவுக்கு அவர்கள் கூட்டத்திலும் தீவிரவாதம் பரவி இருக்கிறது” என எழுதியுள்ளார்.
எந்த மதமும் பயங்கரவாதம், தீவிரவாதம் குறித்து போதிக்கவில்லை. அன்பையும், நல்லிணக்கத்தையும் தான் வலியுறுத்துகின்றன. தமிழகத்தில் பிரிவினையை உண்டாக்க கமல் நினைக்கிறார்.

இந்துக்களை தீவிரவாதி என்று கூறி தமிழகத்தில் மிகப்பெரிய வன்முறையை தூண்டும் வகையிலும், இறையாண்மையை கெடுக்கும் விதமாகவும் கமல் செயல்படுகிறார். பெரும்பான்மை இந்து மக்களின் நம்பிக்கையை ஏளனம் செய்வதையும், தமிழக மண்ணில் உள்ள மதச்சார் பின்மையை சாகடிக்கும் நடவடிக்கையையும் கமல் நிறுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் கமல் மன்னிப்பு கேட்க வேண்டும். அவரை தேசவிரோத சட்டத்தில் கைது செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story