கமல்ஹாசனை களத்தில் சந்திப்போம் பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்


கமல்ஹாசனை களத்தில் சந்திப்போம் பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்
x
தினத்தந்தி 5 Nov 2017 6:49 PM IST (Updated: 5 Nov 2017 6:49 PM IST)
t-max-icont-min-icon

கமல்ஹாசனை களத்தில் சந்திப்போம் என பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேசிஉள்ளார்.


சென்னை, 

நடிகர் கமல்ஹாசன் அவ்வப்போது அரசியல் நிலவரம் குறித்து டுவிட்டரில் விமர்சித்து வருகிறார். இதனால் அவர் எந்த நேரத்திலும் தீவிர அரசியலில் குதிக்கலாம் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.

கேளம்பாக்கத்தில் நடைபெறும் நற்பணி மன்ற விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசுகையில் அரசியல் கட்சி தொடங்குவதையும், அரசியலுக்கு வருவதையும் உறுதி செய்து உள்ளார். அவருடைய அரசியல் பயணம் தொடர்பாக பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் தங்களது கருத்துக்களை கூறி வருகிறார்கள். அரசியலுக்கு வரும் கமல்ஹாசனின் முடிவை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது என திருமாவளவன் கூறிஉள்ளார். 

தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கமல்ஹாசனை களத்தில் சந்திப்போம் என கூறிஉள்ளார். 

நடிகர் கமல் களத்தில் இறங்கட்டும், மக்கள் யாரை ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். வெற்றிடத்தை நிரப்பிவிடலாம் என பலர் மனக்கோட்டை கட்டி வருகின்றனர். அரசியல் ஒன்றும் திரைப்படம் கிடையாது. சிலரது கொள்கைகளை புண்படுத்தும்படி பேசினால் மக்கள் அதற்கு பதிலடி கொடுப்பார்கள் என கூறிஉள்ளார் தமிழிசை சவுந்தரராஜன். 

Next Story