பிரதமர் மோடி தி.மு.க தலைவர் கருணாநிதியை சந்தித்து உடல் நலம் விசாரித்தார்


பிரதமர் மோடி தி.மு.க தலைவர் கருணாநிதியை சந்தித்து உடல் நலம் விசாரித்தார்
x
தினத்தந்தி 6 Nov 2017 1:05 PM IST (Updated: 6 Nov 2017 1:04 PM IST)
t-max-icont-min-icon

பிரதமர் மோடி கோபாலபுரம் சென்று அங்கு தி.மு.க தலைவர் கருணாநிதியை சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.

சென்னை

சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் இன்று நடைபெற்றது. விழாவில் கலந்து இந்த விழாவில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து இன்று காலை  தனி விமானம் மூலம் சென்னை வந்தார். விழாவில் கலந்து கொண்டு தினத்தந்தி பவள விழா மலரை வெளியிட்டார்.  தொடர்ந்து சிறப்புரையார்றினார்

பின்னர் பிரதமர் மோடி  தமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.வி. சோமநாதன் மகள் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்

பின்னர்  கோபாலபுரம் சென்ற  பிரதமர் மோடி  அங்கு தி.மு.,க தலைவர் கருணாநிதியை  சந்தித்து உடல் நலம் விசாரித்தார். முரசொலி பவளவிழா மலரை பரிசாக பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் கருணாநிதி வழங்கினார் . முன்னதாக கருணாநிதி வீட்டுக்கு வந்த  பிரதமர் மோடிக்கு மு.க ஸ்டாலின் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். கனிமொழி, துரை முருகன், தமிழிசை சவுந்தர ராஜன் உடன் இருந்தனர்.

திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தபின், கோபாலபுரத்தில் இருந்து புறப்பட்டார் பிரதமர் மோடி.

Next Story