புதுச்சேரியில் 3 அரசு பேருந்துகளுக்கு தீ வைப்பு


புதுச்சேரியில் 3 அரசு பேருந்துகளுக்கு தீ வைப்பு
x
தினத்தந்தி 7 Nov 2017 8:32 AM IST (Updated: 7 Nov 2017 8:32 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் 3 அரசு பேருந்துகளுக்கு அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்தனர்.

புதுச்சேரி,

புதுச்சேரியில் சுதேசி மில் அருகே அரசு போக்குவரத்து கழக பணிமனை ஒன்று அமைந்துள்ளது. இந்த நிலையில் இன்று அதிகாலையில் அங்கிருந்த 3 பேருந்துகளுக்கு அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்துள்ளனர். அதன்பின் அவர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.

இதுபற்றிய தகவல் தீயணைப்பு வீரர்களுக்கு தெரிய வந்தது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீயை அணைத்தனர்.


Next Story