பிரதமர் மோடியின் சிறப்பான ஆட்சி தொடர வாழ்த்துக்கள் - மு.க.அழகிரி
மனிதாபிமான அடிப்படையில் எனது தந்தை மற்றும் தாயை சந்தித்து உடல் நலம் விசாரித்த பிரதமர் மோடிக்கு நன்றி என மு.க அழகிரி கூறி உள்ளார்.
சென்னை
சென்னையில் நேற்று நடந்த தினத்தந்தி பவளவிழாவில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இதைத் தொடர்ந்து, கோபாலபுரம் சென்ற பிரதமர் மோடி, தி.மு.க தலைவர் கருணாநிதியைச் சந்தித்து சுமார் 20 நிமிடங்கள் பேசினார். அப்போது, உடல்நிலை குறித்து மோடி கேட்டறிந்தார். கருணாநிதி, முரசொலி பவளவிழா மலரை மோடிக்குப் பரிசாகக் கொடுத்தார். இந்தச் சந்திப்பு, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
இது குறித்து மு.க அழகிரி கூறியதாவது:-
மனிதாபிமான அடிப்படையில் எனது தந்தை மற்றும் தாயை சந்தித்து உடல் நலம் விசாரித்த பிரதமர் மோடிக்கு நன்றி. பிரதமர் மோடியின் சிறப்பான ஆட்சி தொடர வாழ்த்துக்கள் என கூறி உள்ளார்.
Related Tags :
Next Story