நடிகர் கமல்ஹாசனுக்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பிறந்தநாள் வாழ்த்து


நடிகர் கமல்ஹாசனுக்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பிறந்தநாள் வாழ்த்து
x
தினத்தந்தி 7 Nov 2017 3:57 PM IST (Updated: 7 Nov 2017 3:57 PM IST)
t-max-icont-min-icon

நடிகர் கமல்ஹாசனுக்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் பிறந்தநாள் வாழ்த்துதெரிவித்தார்.

சென்னை

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முதலமைச்சர் தலைமையிலான அரசு, குதிரை பேர அரசு அல்ல, குதிரை வேக அரசு. கமல்ஹாசனுக்கு -க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள், யார் வேண்டுமானாலும் கட்சி துவங்கலாம், மக்கள் ஆதரவு யாருக்கு என்பதுதான் முக்கியம். யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம்; ஆனால் இறுதி எஜமானர்கள் மக்கள் தான். கட்சி தொடங்குவதற்காக தொண்டர்களிடம் யாரும் பணம் கேட்டது இல்லை. அன்றும், இன்றும், நாளையும் எம்ஜிஆர், ஜெயலலிதா பக்கமே மக்கள் உள்ளனர்.

எதிர்காலத்தில் மழை நீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்கப்படும். மழை பெய்யும்போது மட்டும்தான் நீர் தேங்குகிறது, மழை நின்றால் நீர் வடிந்துவிடும். 2015 ல் ஏற்பட்ட வெள்ளம் தற்போது ஏற்பட்ட பாதிப்பை பாடமாக எடுத்து கொண்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story