கருணாநிதியை, பிரதமர் மோடி சந்தித்ததில் அரசியல் உள்நோக்கம் இல்லை பொன்.ராதாகிருஷ்ணன்
கருணாநிதியை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்ததில் அரசியல் உள்நோக்கம் இல்லை என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
குழித்துறை,
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் நேற்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக அரசு மழை வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசிடம் நிவாரண நிதி கேட்டுள்ளது. பிரதமர் மோடி, மழைவெள்ள பாதிப்பு தினசரி நிகழ்வாக இருக்க கூடாது. நிரந்தர தீர்வாக இருக்க வேண்டும். எந்த மழை வந்தாலும் மக்களை பாதிக்காத வகையில் திட்டம் வகுத்து கூறுங்கள். அதற்கு தேவையான நிதியை தர தயாராக இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் ஓராண்டு நிறைவு தினத்தை துக்க தினமாக கடைபிடிக்க போவதாக எதிர்க்கட்சிகள் அறிவித்து உள்ளன. இது கருப்பு பணம் மற்றும் கொள்ளையடித்த பணத்தை பதுக்கி வைத்திருந்தவர்களுக்கு தான் துக்க தினம். நேர்மையாக உழைத்தவர்களுக்கு மகிழ்ச்சி தினம்தான்.
நடிகர் கமல்ஹாசன் மீது வழக்கு போட்டிருப்பதிலும், கார்ட்டூனிஸ்ட் பாலா கைது செய்யப்பட்டிருப்பதிலும் மத்திய அரசுக்கு எந்த தொடர்பும் கிடையாது. இது மாநில அரசுகள் சம்பந்தப்பட்டது.
கமல்ஹாசன் தனிக்கட்சி தொடங்கினால் அதனை வரவேற்கிறேன். அதனால், பா.ஜனதா கட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்பட போவதில்லை.
தமிழகத்தில், 5 முறை முதல்-அமைச்சராக இருந்தவர், மூத்த அரசியல்வாதி என்ற அடிப்படையில் கருணாநிதியை அவரது உடல்நலம் கருதி பிரதமர் மோடி நேரில் சென்று பார்த்தார். இதில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story