மழைவெள்ள நிவாரண பணிகளில் ஈடுபடுங்கள் தொண்டர்களுக்கு திருநாவுக்கரசர் வேண்டுகோள்
கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை செய்ய அ.தி.மு.க. அரசு தவறி விட்டதால், காங்கிரஸ் தொண்டர்கள் முழுவீச்சில் நிவாரணப் பணிகளில் ஈடுபடுங்கள் என்று சு.திருநாவுக்கரசர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை,
இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்பட பல மாவட்டங்களில் கனமழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. 2015-ம் ஆண்டு வெள்ளப் பெருக்கு, கடந்த ஆண்டு (2016) வார்தா புயல் பாதிப்புகளை அடிப்படையாக வைத்து மத்திய அரசிடம் அ.தி.மு.க. அரசு நிவாரண நிதி கேட்டது. கேட்கப்பட்ட நிதியில் 5 சதவீதத்தை கூட வழங்க மறுத்து, தமிழகத்தை மத்திய பா.ஜ.க. அரசு புறக்கணித்துவிட்டது.
இந்த நிலையில் தற்போது ரூ.1,500 கோடி நிதியை எடப்பாடி பழனிசாமி அரசு கேட்டிருக்கிறது. பிரதமர் நரேந்திரமோடியும் தேவையான அளவுக்கு நிதி ஒதுக்குவதாக கூறியதால், அதற்காக முதல்-அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார். ஏற்கனவே கேட்ட நிதியை கொடுக்காத பா.ஜ.க. அரசு, தற்போது கேட்கும் நிதியை கொடுக்கும் என்று எந்த நம்பிக்கையில் எடப்பாடி, பிரதமருக்கு நன்றி தெரிவிக்கிறார்?.
கடந்த 10 நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் காவிரி டெல்டா மாவட்டங்களில் விளை நிலங்கள் வெள்ளக் காடாக மாறியதால் விவசாயிகள் பெரும் துன்பத்தில் ஆழ்ந்துள்ளனர். தற்போதைய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகளை மேற்கொள்வதில் அ.தி.மு.க. அரசு முற்றிலும் தவறிவிட்ட நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் தங்கள் பகுதிகளில் முழுவீச்சில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்குவது, பாதுகாப்பான இடத்தில் தங்கவைப்பது, மருத்துவ முகாம்கள் நடத்துவது போன்ற நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story