பணமதிப்பிழப்பு விவகாரத்தில் காங்கிரஸ் மக்களை குழப்பும் முயற்சியில் ஈடுபடுகிறது-நிர்மலா சீதாராமன்


பணமதிப்பிழப்பு விவகாரத்தில்  காங்கிரஸ் மக்களை குழப்பும் முயற்சியில் ஈடுபடுகிறது-நிர்மலா சீதாராமன்
x
தினத்தந்தி 8 Nov 2017 11:35 AM IST (Updated: 8 Nov 2017 11:35 AM IST)
t-max-icont-min-icon

பணமதிப்பிழப்பு விவகாரத்தில் மக்களை குழப்பும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுவடுவது சரியல்ல என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.


சென்னை

மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் அரசு திட்டங்களிலுருந்து போலியான நபர்கள் ஆதாயம் பெறுவது தடுக்கப்பட்டுள்ளது.ரொக்கப் பயன்பாடு அதிகளவில் இருந்தது பயங்கரவாதிகளுக்கு சாதகமாக இருந்தது. பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால்  பயங்கரவாதிகளிடம் இருந்த பணம் முடங்கியது. இதனால் காஷ்மீரில் கல்லெறி சம்பவங்கள் 4 ஆயிரத்திலிருந்து 600 ஆக குறைந்தது. 

பெரிய செலவுகளை ரொக்கமாக மேற்கொண்டால் யாருக்கும் நல்லதல்ல; கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க முயன்றவர்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தியாவில் ரொக்கம் அதில் 12 சதவிகிதம் இருந்தது; படிப்படியாக ரொக்க உபயோகத்தைக் குறைந்துக் கொள்ள வேண்டும். பொருளாதார வெளிப்படைத்தன்மையை ஊக்குவிக்க முயற்சி; கறுப்புப்பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பது பாஜகவின் தேர்தல் வாக்குறுதி.

ரூ.500, ரூ.1000 நீக்கத்தை முன்கூட்டியே அறிவித்திருந்தால் பணம் பதுக்கியிருப்பவர்கள் சிக்கியிருக்க மாட்டார்கள் ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற அறிவிப்புக்கு பிறகு, வங்கிக்கு வந்த அனைத்து பணமும் வெள்ளை பணம் அல்ல. பணமதிப்பிழப்பு திடீரென எடுக்கப்பட்ட நடவடிக்கை இல்லை; வெளிநாடுகளில் உள்ள கறுப்புப்பணத்தை மீட்க முயற்சி எடுக்கப்படும் என்பதில் உறுதி. வெளிப்படையான பணப்பரிமாற்றம் நாட்டின் வளர்ச்சிக்கு நல்லது.

மன்மோகன் சிங் பேச்சு மனவேதனையைத் தருகிறது. பிரதமராக இருந்த     மன்மோகன் சிங் இருந்தபோது ஊழல் நடந்து கொண்டே இருந்தது. தனது ஆட்சியில் நடந்த ஊழலை மன்மோகன் சிங் கண்டும் காணாமல் இருந்தார். மன்மோகன் சிங் ஆட்சியில் காற்று, நிலம் என பல்வேறு ஊழல்கள் நடைபெற்றது . பல்வேறு ஊழல்களை கண்டுகொள்ளாமல் ஆட்சி நடத்திய மன்மோகனின் விமர்சனம் வேதனை அளிக்கிறது. பிரதமராக இருந்த போது மன்மோகன்சிங் ஒரு கருவியாகவே செயல்பட்டார்

கருப்பு பணத்தை ஆதரிப்பவர்களே, கருப்பு தினமாக அனுசரிப்பார்கள். கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்கான முயற்சி தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும்; வருமானத்திற்கு அதிகமான பணம் குறித்து விசாரிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. பணமதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து கமல்ஹாசன் முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும். ஜனநாயத்தில் அரசியலுக்கு வர யாருக்கு வேண்டுமானாலும் உரிமை உண்டு. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story