மோடியை நாங்கள் அரசியலுக்காக பயன்படுத்தவில்லை - மு.க.ஸ்டாலின்
மோடி அரசியலுக்காக சென்னை வரவில்லை; நாங்களும் அவரை அரசியலுக்காக பயன்படுத்தவில்லை என மதுரை ஆர்ப்பாட்டத்தில் மு.க ஸ்டாலின் பேசினார்.
மதுரை
பண மதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இன்றுடன் ஓராண்டு முடிந்துள்ளது. இந்த நவம்பர் 8-ந்தேதியை “கருப்பு தினம்” ஆக கடைபிடித்து எதிர்ப்பை வெளிப்படுத்த எதிர்க்கட்சிகள் முடிவு செய்தன. நாடு முழுவதும் முக்கிய இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தவும் காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும் முடிவு செய்தன.
அதன்படி இந்தியா முழுவதும் இன்று பண மதிப்பு நீக்க நடவடிக்கையை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. அனைத்து மாநிலங்களிலும் எதிர்க்கட்சியினர் ஒன்றிணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள்.
மதுரையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நள்ளிரவு பெற்ற சுதந்திரத்தை நவ.8 நள்ளிரவிலேயே இழந்தோம்; துன்பத்தை உருவாக்கி இருக்கக் கூடிய நாளாக இந்த நாள் அமைந்துள்ளது. எந்தத் திட்டமிடலும் இல்லாமல் திடீரென்று பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தார்கள்; பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிரதமர் மோடி பதில் சொல்ல வேண்டிய நிலை நாட்டில் ஏற்படும்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் இந்தியாவில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது; பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி நடவடிக்கை அனைத்துத் தரப்பினரையும் பாதித்துள்ளது. ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற அறிவிப்புக்கு முன் எந்த முன்னேற்ப்பாடும் செய்யவில்லை;. திடீரென அறிவிப்பு மட்டுமே வந்தது.
ரூபாய் நோட்டு விவகாரத்தை பாஜக தலைவர்களும் எதிர்க்கின்றனர். ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற அறிவிப்பால் பொருளாதார வீழ்ச்சி என நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். ரூபாய் நோட்டு விவகாரத்தில் திமுகவின் எதிர்ப்பு தொடரும். ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற அறிவிப்பால் சிறு, குறு தொழில்கள் நசுக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்த பணப்புழக்கத்தை முடக்கிய ஆட்சி மோடி தலைமையிலான ஆட்சி. ரூபாய் நோட்டு விவகாரத்தில் பிரதமர் மோடி பதில் சொல்ல வேண்டிய நிலை உருவாகும்.
ரேசன் கடைகளில் சர்க்கரை விலை உயர்வை கண்டித்து நவ.6-ம் தேதி அறிவிக்கப்பட்ட போராட்டம் மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது; பிரதமர் வந்ததால் அல்ல.
மோடி அரசியலுக்காக சென்னை வரவில்லை; நாங்களும் அவரை அரசியலுக்காக பயன்படுத்தவில்லை. கருணாநிதி- பிரதமர் மோடி சந்திப்பை வைத்து அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சி வெற்றி பெறாது; கருணாநிதியை பிரதமர் மோடி சந்தித்தது அரசியலுக்கு அப்பாற்பட்டது.
மோடி கோபாலபுரத்திற்கு சென்று ஸ்டாலினுடன் கை குலுக்கியதால் தி.மு.க.வின் போராட்டம் நிறுத்தப்பட்டு விட்டதாக செய்திகள் வந்தன. மேலும் பாரதீய ஜனதாவுடன் தி.மு.க. கூட்டணி வைக்கும் என கற்பனை செய்திகளும் வெளியாகி உள்ளன.
6-ந்தேதி பிரதமர் மோடி சென்னை வருகிறார். எனவே ஆர்ப்பாட்டத்தை மாலையில் வைத்துக் கொள்ளுமாறு சென்னை நகர போலீஸ் கமிஷனர் தொலைபேசி மூலம் அண்ணா அறிவாலயத்துக்கு தொடர்பு கொண்டு கூறினார். ஆனால் நாங்கள் மாலை நேரங்களில் ரேசன் கடை இயங்காது. காலையிலேயே போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தோம்.
பல்வேறு விழாக்களில் கலந்து கொள்ள வந்த மோடி வயது மூப்பு காரணமாக ஓய்வெடுத்து வரும் தி.மு.க. தலைவரை மனிதாபிமான அடிப்படையில் நலம் விசாரிக்க சென்னை வந்தார். அவரை வரவேற்பதற்காக நானும் முன்கூட்டியே துபாயில் இருந்து 5-ந் தேதியே சென்னை வந்தேன்.
தி.மு.க. தலைவரை சந்தித்து நலம் விசாரித்த பிரதமர் மோடி டெல்லியில் உள்ள தனது இல்லத்துக்கு வந்து ஓய்வு எடுக்குமாறு அவரிடம் அழைப்பு விடுத்தார். இது மனிதாபிமானம் தான். அரசியலுக்கு அப்பாற்பட்டது.
ஆனால் இதை திரித்துக்கூறி குழப்பத்தை ஏற்படுத்தலாம் என முயற்சி நடக்கிறது. ஆனால் அந்த கனவு நிச்சயம் பலிக்காது. இன்று பத்திரிகை செய்திகளில் பண மதிப்பிழப்பு பாதிப்பு குறித்த கட்டுரைகள் வெளியாகி உள்ளன.
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் பண மதிப்பிழப்பு நடவடிக்கை திட்டமிட்ட கொள்ளை. பொருளாதாரத்திற்கும், ஜனநாயகத்திற்கும் கருப்பு தினம் என கூறியுள்ளார். இதே போல் முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பொருளாதார வளர்ச்சி இல்லை. வளர்ச்சி விகிதமும் குறைந்துள்ளது. 99 சதவிகித பணம் வங்கிகளுக்கே திரும்பியுள் ளதால் பண மதிப்பிழப்பின் கருப்பு பண ஒழிப்பின் நடவடிக்கை நிறைவேறவில்லை என்று கூறியுள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.

Related Tags :
Next Story