மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் குமரி அனந்தனுடன் முத்தரசன், வைகோ சந்திப்பு


மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் குமரி அனந்தனுடன் முத்தரசன், வைகோ சந்திப்பு
x
தினத்தந்தி 8 Nov 2017 10:41 PM IST (Updated: 8 Nov 2017 10:41 PM IST)
t-max-icont-min-icon

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் குமரி அனந்தனுடன் முத்தரசன், வைகோ சந்தித்து உடல்நலம் விசாரித்தனர்.

சென்னை, 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் குமரி அனந்தன், உடல்நல குறைவு காரணமாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பல்வேறு கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் சந்தித்து உடல்நலம் விசாரித்து வருகின்றனர்.

அந்தவகையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு, மாநில செயலாளர் இரா.முத்தரசன் ஆகியோர் சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர். மேலும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் மருத்துவமனைக்கு சென்று உடல்நலம் விசாரித்தனர்.

பின்னர் அவர்கள் குமரி அனந்தனுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து அங்குள்ள டாக்டர்களிடம் கேட்டறிந்தனர்.

Next Story