தொழில்துறையில் தமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்ற நடவடிக்கை வேண்டும் விஜயகாந்த்


தொழில்துறையில் தமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்ற நடவடிக்கை வேண்டும் விஜயகாந்த்
x
தினத்தந்தி 9 Nov 2017 12:15 AM IST (Updated: 8 Nov 2017 10:50 PM IST)
t-max-icont-min-icon

தொழில்துறையில் தமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்ற நடவடிக்கை வேண்டும் என விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை, 

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

அ.தி.மு.க. அரசு கடந்த 2015–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை சென்னையில் நடத்தியது. இம்மாநாட்டில் 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டதாகவும், ரூ.2½ லட்சம் கோடிக்கு மேல் முதலீட்டு தொகையாகவும், இதன் மூலம் 4¾ லட்சம் பேருக்கு மேல் வேலைவாய்ப்பு உருவாக்கப்படுவதாகவும் கூறப்பட்டது. ஆனால் வேலைவாய்ப்பு இல்லாமல் லட்சக்கணக்கான இளைஞர்கள் ஏக்கத்தோடும், மிகவும் கொதிப்போடு இருக்கிறார்கள்.

‘ஆசியாவிலேயே தொழில்முனையும் களத்தில் தமிழகத்தை முதல் மூன்று இடத்திற்குள் கொண்டுவருவேன். 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி தமிழக இளைஞர்களுக்கு பல லட்சம் வேலைவாய்ப்பை உருவாக்கி தருவேன்’, என்ற ஜெயலலிதாவின் அறிவிப்பு, இன்றுவரை வெற்று கானல் நீராக போய்கொண்டு இருக்கிறது. ஜெயலலிதா மறைந்ததோடு, ஆட்சி அதிகாரத்தை தக்கவைக்க மட்டும் செயலாற்றி, மக்களை வஞ்சித்து வருகிறார்கள். இனியாவது பொய்யான அறிக்கை, அறிவிப்பை தராமல் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குகின்ற வகையில், தமிழகத்தை தொழில்துறையில் முன்னோடி மாநிலமாக மாற்ற உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story