மன்னார்குடி மன்னைநகரில் உள்ள டி.டி.வி. தினகரன் வீட்டில் வருமான வரி துறை சோதனை

மன்னார்குடி மன்னைநகரில் உள்ள டி.டி.வி. தினகரன் வீட்டில் வருமான வரி துறை சோதனை
x
தினத்தந்தி 9 Nov 2017 8:16 AM IST (Updated: 9 Nov 2017 8:16 AM IST)
t-max-icont-min-icon

மன்னார்குடி மன்னைநகரில் உள்ள டி.டி.வி. தினகரன் வீட்டில் வருமான வரி துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை,

சென்னையில் உள்ள ஜெயா தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் நமது எம்.ஜி.ஆர். நாளிதழ் அலுவலகம் ஆகியவற்றில் வருமான வரி துறை சோதனை நடந்து வருகிறது.

முறையாக வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாத நிலையில் வருமான வரி துறை சோதனை நடைபெறுகிறது. வருமான வரி ஆவணங்களும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. வருமான வரி ஏய்ப்பு செய்யப்பட்டு உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள ஜெயா டி.வி. சி.இ.ஓ. விவேக் ஜெயராமன் வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது.

மன்னார்குடி மன்னைநகரில் உள்ள டி.டி.வி. தினகரன் வீட்டில் வருமான வரி துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

Next Story