‘யுனெஸ்கோ’ பாரம்பரிய இசை நகரங்களின் பட்டியலில் சென்னை நகரம்: கவர்னர் பன்வாரிலால் புரோஹித் வாழ்த்து


‘யுனெஸ்கோ’ பாரம்பரிய இசை நகரங்களின் பட்டியலில் சென்னை நகரம்: கவர்னர் பன்வாரிலால் புரோஹித் வாழ்த்து
x
தினத்தந்தி 9 Nov 2017 8:29 PM IST (Updated: 9 Nov 2017 8:29 PM IST)
t-max-icont-min-icon

யுனெஸ்கோவின் படைப்பாக்க நகரங்கள் பட்டியலில் சென்னை சேர்க்கப்பட்டுள்ளதற்கு கவர்னர் பன்வாரிலால் புரோஹித் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

கலாசாரத் துறையில் சிறந்து திகழும் உலக நகரங்களின் பட்டியலை ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பான ‘யுனெஸ்கோ’ வெளியிட்டது. இதில் உலகின் தலைசிறந்த 64 நகரங்களின் வரிசையில் இந்தியாவில் இருந்து சென்னை நகரமும் தேர்வாகி உள்ளது.

தென்னிந்தியாவின் கலாசார தலைநகர் என்னும் சிறப்பு அடைமொழியை கொண்டுள்ள சென்னை, பாரம்பரிய இசையில் செறிந்த வளத்தை கொண்ட நகரம் என்பதற்காகவும், இசைக்கு மிகுந்த ஊக்கம் அளித்து வருவதற்காகவும் இந்த பட்டியலில் தேர்வு செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் யுனெஸ்கோவின் படைப்பாக்க நகரங்கள் பட்டியலில் சென்னை சேர்க்கப்பட்டுள்ளதற்கு கவர்னர் பன்வாரிலால் புரோஹித் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Next Story