சசிகலா, தினகரன் தொடர்புடைய வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை


சசிகலா, தினகரன் தொடர்புடைய வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை
x
தினத்தந்தி 10 Nov 2017 5:45 AM IST (Updated: 9 Nov 2017 11:19 PM IST)
t-max-icont-min-icon

சசிகலா, தினகரன் தொடர்புடைய வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தினார்கள்.

சென்னை,

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் இருப்பதால், அவரது உறவினரான டி.டி.வி.தினகரன் சசிகலா அணிக்கு தலைமை தாங்கி வழிநடத்தி வருகிறார்.

இந்த நிலையில், சசிகலா, தினகரன், சசிகலாவின் கணவர் நடராஜன், சகோதரர் திவாகரன், அண்ணன் மனைவி இளவரசியின் மகன் விவேக் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களின் வீடு, அலுவலகங்கள், எஸ்டேட்டுகள் உள்ளிட்ட 187 இடங்களில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

இந்த சோதனையின் போது ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

தமிழகத்திலும் பிற பகுதிகளிலும் ஒரே நாளில் இவ்வளவு அதிகமாக இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சசிகலா, தினகரன் தொடர்புடையவர்களின் வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 187 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினார்கள். இதுவரை இல்லாத அளவுக்கு நடந்த இந்த வேட்டையில் 1,600 அதிகாரிகள் ஈடுபட்டனர்.

Next Story