பாரம்பரிய இசை நகரமாக சென்னை தேர்வு மு.க.ஸ்டாலின் நன்றி


பாரம்பரிய இசை நகரமாக சென்னை தேர்வு மு.க.ஸ்டாலின் நன்றி
x
தினத்தந்தி 10 Nov 2017 12:30 AM IST (Updated: 10 Nov 2017 12:06 AM IST)
t-max-icont-min-icon

பாரம்பரிய இசை நகரமாக சென்னை தேர்வு செய்யப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

சென்னை, 

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:–

மண்டப அரங்குகளில் இசைக்கும் கர்நாடக சங்கீதம் முதல், மண்ணின் மனிதர்களிடம் ஒலிக்கும் கானா பாடல்கள் வரை முத்தமிழின் ஓர் அங்கமான இசைத்தமிழின் பல வடிவங்களை மேடைகளிலும், திரைப்படங்களிலும் வளர்க்கும் சென்னை மாநகரத்திற்கு பாரம்பரிய இசைக்கான படைப்பு நகரம் என்ற பெருமையை யுனெஸ்கோ அமைப்பு வழங்கியிருப்பது மகிழ்ச்சி தருகிறது. நன்றியையும், மகிழ்ச்சியையும் இதயத்தால் இசைப்போம்.

இவ்வாறு தெரிவித்து உள்ளார்.


Next Story