வேளாண்மை துறை, கல்வியியல் கட்டிடங்கள் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்
தமிழகம் முழுவதும் வேளாண்மை துறை, கல்வியியல் கட்டிடங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
சென்னை,
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றத்தில் கட்டப்பட்டுள்ள 2 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட மதில் சுவருடன் கூடிய சேமிப்புக் கிடங்கை காணொலிக் காட்சி மூலமாக தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
மேலும், நாகப்பட்டினம் மாவட்டம் செம்பனார்கோயில், பெரம்பலூர், திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் மற்றும் துரிஞ்சாபுரம், விழுப்புரம் மாவட்டம் வானூர் மற்றும் மரக்காணம் ஆகிய இடங்களில் 6 ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையக் கட்டிடங்கள்; நபார்டு வங்கியின் கிடங்கு உள்கட்டமைப்பு நிதியின் கீழ் ஈரோடு மாவட்டம் மயிலம்பாடியில் 2 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட அலுவலகக் கட்டிடத்துடன் கூடிய சேமிப்பு கிடங்கு; விழுப்புரம் மாவட்டம் மணலூர்பேட்டையில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம்; திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம்; திருவண்ணாமலை மாவட்டம் அம்மாபாளையத்தில் மஞ்சள் பதப்படுத்தும் மையம்; ஈரோடு மாவட்டம் வில்லரசம்பட்டியில் அலுவலகக் கட்டிடத்துடன் கூடிய பரிவர்த்தனைக் கூடம்; திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலையில் மாவட்ட தோட்டக்கலை தொழில்நுட்ப ஆதார மையம் என மொத்தம் 17 கோடியே 77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வேளாண்மைத் துறை கட்டிடங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் புறநகர் வீட்டு காய்கறி உற்பத்தி பெருக்கு திட்டத்தின் கீழ், கத்தரி, தக்காளி, புடலங்காய், பாகற்காய், பீர்க்கன்காய், மிளகாய், கொத்தவரங்காய் மற்றும் கீரைவகைகள் ஆகியவற்றில் ஏதேனும் 5 காய்கறி விதைகள் அடங்கிய 6 லட்சத்து 25 ஆயிரம் பாக்கெட்டுகளை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கும் அடையாளமாக, 5 பயனாளிகளுக்கு காய்கறி விதைகள் அடங்கிய பாக்கெட்டுகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், ரகுநாதபுரத்தில் உள்ள அரசு பல்வகை தொழில்நுட்பக் கல்லூரிக்கு 25 கோடியே 66 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் கட்டப்பட்டுள்ள நிர்வாக மற்றும் கல்வியியல் கட்டிடங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
மேலும் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு 7 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தரை மற்றும் இரண்டு தளங்களுடன் கட்டப்பட்டுள்ள நிர்வாக மற்றும் கல்வியியல் கட்டிடங்கள் மற்றும் கடலூர் மாவட்டம், சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உடற்பயிற்சி கூடம் எனமொத்தம் 34 கோடியே 41 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உயர்கல்வித் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களையும் அவர் திறந்து வைத்தார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story