இலங்கை அரசின் நிறுவனங்களுக்கு மீண்டும் சவுமிய மூர்த்தி தொண்டமான் பெயரை சூட்ட வேண்டும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
இலங்கை அரசின் நிறுவனங்களுக்கு மீண்டும் சவுமிய மூர்த்தி தொண்டமான் பெயரை சூட்ட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பொறுத்துக்கொள்ள இயலாது
மலையக தமிழர்களின் நலனுக்காகவும், உரிமைகளுக்காகவும் தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட சவுமிய மூர்த்தி தொண்டமானின் பெயரை அரசு நிறுவனங்களில் இருந்து இலங்கை அரசு நீக்கியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. மலையக தமிழர்களின் வாழ்வு மேம்படுவதற்காக சிலோன் இந்திய காங்கிரஸ் என்ற கட்சியை துவக்கி, தொடர்ந்து அவர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வந்த அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில்தான் அரசு நிறுவனங்களுக்கு சவுமிய மூர்த்தி தொண்டமானின் பெயர் சூட்டப்பட்டிருந்தது.
இலங்கையில் உள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி மையம், தொண்டமான் கலாசார மையம், தொண்டமான் மைதானம் போன்றவற்றிலிருந்து தொண்டமான் பெயரை நீக்கி, மலையகத் தமிழர்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்தியுள்ள இலங்கை அரசின் நடவடிக்கையை பொறுத்துக்கொள்ள இயலாது.
சூட்ட வேண்டும்
ஏற்கனவே தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிப்பதிலும், ஆக்கிரமித்துள்ள தமிழர்களின் நிலங்களை விடுவிப்பதிலும், ஈழ தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற போர்க்குற்றங்கள் மீது சர்வதேச விசாரணை நடத்துவதிலும் இலங்கை அரசு முற்றிலும் ஒத்துழைக்க மறுத்து, தமிழர்களுக்கு அநீதி இழைத்து வருகிறது. இந்த சூழ்நிலையில் மலையக தமிழர்களின் உணர்வுகளையும் அவமதிக்கும் வகையில் சவுமிய மூர்த்தி தொண்டமான் பெயரை நீக்கியிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்திருக்கிறது.
ஆகவே, இலங்கை அரசு உடனடியாக இந்தப் போக்கை கைவிட்டு, பெயர் நீக்கம் செய்யப்பட்ட அரசு நிறுவனங்களுக்கு மீண்டும் சவுமிய மூர்த்தி தொண்டமான் பெயரை சூட்ட வேண்டும் என்றும், அது ஒன்றே மலையக தமிழர்களின் நலனுக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்துக்கொண்ட சவுமிய மூர்த்தி தொண்டமானுக்கு இலங்கை அரசு செலுத்தும் நன்றிக்கடனாக இருக்க முடியும் என்றும் தெரிவித்துகொள்ள விரும்புகிறேன்.
இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story