தமிழகம் முழுவதும் சசிகலா உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் 40 இடங்களில் 3வது நாளாக சோதனை
தமிழகம் முழுவதும் சசிகலா உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் 40 இடங்களில் 3வது நாளாக வருமான வரி சோதனை நடந்து வருகிறது.
சென்னை,
சென்னையில் உள்ள ஜெயா தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் நமது எம்.ஜி.ஆர். நாளிதழ் அலுவலகம் ஆகியவற்றில் கடந்த 9ந்தேதி வருமான வரி துறை சோதனை நடத்தியது.
சென்னையில் உள்ள ஜெயா தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் நமது எம்.ஜி.ஆர். நாளிதழ் அலுவலகம் ஆகியவற்றில் கடந்த 9ந்தேதி வருமான வரி துறை சோதனை நடத்தியது.
இதேபோன்று சசிகலாவின் உறவினர்களான திவாகரன், விவேக், கிருஷ்ணப்ரியா ஆகியோரின் வீடுகளிலும் சோதனை நடந்தது.
முறையாக வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாத நிலையில் வருமான வரி துறை சோதனை நடைபெறுகிறது. வருமான வரி ஏய்ப்பு செய்யப்பட்டு உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று 2வது நாளாகவும் சோதனை நடைபெற்றது.
இந்த நிலையில் ஜெயா தொலைக்காட்சி நிறுவனம், இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா மற்றும் விவேக் வீடுகளில் வருமான வரி துறை இன்று 3வது நாளாக சோதனை நடத்தி வருகிறது.
தமிழகம் முழுவதிலும் சசிகலாவின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகள் என 40 இடங்களில் இன்று வருமான வரி துறை சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையில் வருமான வரி ஆவணங்களும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
Related Tags :
Next Story