‘ஜெயலலிதா சிகிச்சை வீடியோ பதிவு என்னிடம் உள்ளது’ டி.டி.வி. தினகரன் பேட்டி
‘ஜெயலலிதா சிகிச்சை வீடியோ பதிவு என்னிடம் உள்ளது’ என டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
திருவண்ணாமலை,
அ.தி.மு.க. (அம்மா) அணியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் திருவண்ணாமலையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை வீடியோ ஆதாரம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு அவர் பதில் அளிக்கையில், ‘‘ஜெயலலிதா கேட்டுக்கொண்டதன் பேரில் சிகிச்சைக்கான வீடியோ பதிவுகள் எடுக்கப்பட்டது. அந்த வீடியோ பதிவு என்னிடம் உள்ளது. அதை எடுத்துச் செல்வதற்காக இந்த வருமான வரித்துறை சோதனை நடத்தப்படவில்லை. விசாரணை ஆணையத்தில் கேட்டால் அந்த வீடியோ பதிவை கொடுக்கப்போகிறேன். அதுவும் நிபந்தனைகள் வைத்து கொடுக்க தயாராக இருக்கிறோம்’’ என்றார்.
‘‘எனது வீட்டில் கற்கண்டு இருந்தாலும் சிலர் வைரம் என்பார்கள்’’ என்றும் அப்போது அவர் கூறினார்.
Related Tags :
Next Story