உணவகங்கள் மீதான ஜி.எஸ்.டி. வரி குறைப்பு மத்திய அரசுக்கு, விக்கிரமராஜா நன்றி
உணவகங்கள் மீதான ஜி.எஸ்.டி. வரி குறைப்பு மத்திய அரசுக்கு, விக்கிரமராஜா நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத்தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
கவுகாத்தியில் நேற்று முன்தினம் நடந்த 23–வது கவுன்சில் கூட்டத்தில் வணிகர்களுக்கும் நுகர்வோர்களுக்கும் பயனுள்ள 178 பொருட்களின் மீதான ஜி.எஸ்.டி. வரிவிதிப்பில் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு உள்ளன. குறிப்பாக உணவகங்கள் மீதான வரிவிதிப்பை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைத்து ஏழை–எளிய மக்கள் உணவகங்களை பயன்படுத்திக்கொள்ளும் நிலையை ஏற்படுத்தி தந்த மாநில முதல்–அமைச்சர், துணை முதல்–அமைச்சர், ஜி.எஸ்.டி. கவுன்சில் உறுப்பினரும், அமைச்சருமான டி.ஜெயக்குமார் மற்றும் மத்திய அரசுத்துறை சார்ந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
அதேநேரம் 28 மற்றும் 18 சதவீத ஜி.எஸ்.டி.யில் உள்ள பெரும்பாலான பொருட்களுக்கும் மாற்றம் தேவை. உதாரணமாக கட்டுமானத்திற்கு பயன்படும் சிமெண்ட், கான்கிரீட் சிலாப்கள், போன்றவற்றிற்கான வரிவிதிப்புகள் 28 சதவீதத்திலேயே இருக்கிறது. அடித்தட்டு பொருளாதார மக்களிடையே பாதிப்பை ஏற்படுத்துவதால், கட்டுமானத்துறையின் மீதும் மத்திய–மாநில அரசுகள் கவனம் செலுத்தவேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story