ஜெயா தொலைக்காட்சி தலைமை செயல் அதிகாரி நிர்வகித்து வரும் 100க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் முடக்கம்


ஜெயா தொலைக்காட்சி தலைமை செயல் அதிகாரி நிர்வகித்து வரும் 100க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் முடக்கம்
x
தினத்தந்தி 12 Nov 2017 6:27 AM IST (Updated: 12 Nov 2017 7:59 AM IST)
t-max-icont-min-icon

ஜெயா தொலைக்காட்சி தலைமை செயல் அதிகாரி நிர்வகித்து வரும் 100க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளன என வருமான வரி துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை,

சென்னையில் உள்ள ஜெயா தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் நமது எம்.ஜி.ஆர். ஆகிய இடங்களில் கடந்த 9ந்தேதி வருமான வரி சோதனை நடந்தது.

இதனை தொடர்ந்து ஜெயா தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான விவேக் ஜெயராமன் வீடுகளிலும் சோதனை நடந்தது.

முறையாக வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாத நிலையில் சோதனை நடைபெறுகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், ஜெயா தொலைக்காட்சியின் தலைமை செயல் அதிகாரி நிர்வகித்து வரும் 100க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளன என வருமான வரி துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்த 100 வங்கி கணக்குகளும் 20க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களுக்கு சொந்தமானவை என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.


Next Story