நல்லூர் ஏரிக்கரை உடைந்தது; 200 ஏக்கர் பாசன நிலங்கள் நீரில் மூழ்கும் ஆபத்து


நல்லூர் ஏரிக்கரை உடைந்தது; 200 ஏக்கர் பாசன நிலங்கள் நீரில் மூழ்கும் ஆபத்து
x
தினத்தந்தி 12 Nov 2017 7:37 AM IST (Updated: 12 Nov 2017 7:37 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரத்தில் மதுராந்தகம் அருகே நல்லூர் ஏரிக்கரை உடைந்து உபரி நீர் வெளியேறி வரும் நிலையில் 200 ஏக்கர் பாசன நிலங்கள் நீரில் மூழ்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

காஞ்சீபுரம்,

தமிழகத்தில் கடந்த அக்டோபர் இறுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதனால் கடலோர மாவட்டங்களான சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் உள்ளிட்ட பகுதிகள் அதிக பாதிப்படைந்தன. கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி ஆறுகள், ஏரிகள் மற்றும் நீர்நிலைகள் நிரம்பின.

சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ளம் புகுந்தது. இந்த மழையால் அன்றாட வாழ்க்கை பாதிப்படைந்தது.

இந்த நிலையில் காஞ்சீபுரத்தில் மதுராந்தகம் அருகே நல்லூர் ஏரிக்கரை இன்று உடைந்து உள்ளது. இதனால் 200 ஏக்கர் பாசன நிலங்கள் நீரில் மூழ்கும் ஆபத்து ஏற்பட்டு உள்ளது.


Next Story