சென்னையில் சசிகலாவின் உறவினர்கள் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் 4வது நாளாக தொடரும் சோதனை


சென்னையில் சசிகலாவின் உறவினர்கள் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் 4வது நாளாக தொடரும் சோதனை
x
தினத்தந்தி 12 Nov 2017 8:28 AM IST (Updated: 12 Nov 2017 8:28 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் சசிகலாவின் உறவினர்கள் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் 4வது நாளாக வருமான வரி துறை சோதனை நடைபெறுகிறது.

சென்னை,

சென்னையில் உள்ள ஜெயா தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் நமது எம்.ஜி.ஆர். நாளிதழ் ஆகிய இடங்களில் கடந்த 9ந்தேதி வருமான வரி சோதனை நடந்தது.

முறையாக வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாத நிலையில் சோதனை நடைபெறுகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

வருமான வரி சோதனை கடந்த 3 நாட்களாக நடந்து வந்தது. இந்த நிலையில் இன்று 4வது நாளாக சோதனை தொடருகிறது.

ஜெயா தொலைக்காட்சி தலைமை செயல் அதிகாரி விவேக் ஜெயராமன் நிர்வகித்து வரும் 100க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளன.

அந்த 100 வங்கி கணக்குகளும் 20க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களுக்கு சொந்தமானவை என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள ஜெயா தொலைக்காட்சியின் தலைமை செயல் அதிகாரி விவேக் ஜெயராமன் வீட்டிலும் இன்று 4வது நாளாக சோதனை நடைபெறுகிறது. ஜெயா டி.வி. மற்றும் கிருஷ்ணப்ரியா உள்ளிட்டோர் வீடுகளிலும் வருமான வரி துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

அதிகாலை முதல் 2 அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 9 மணிக்குமேல் இணை ஆணையர் தலைமையில் சோதனை நடைபெறும் என கூறப்படுகிறது.

நாமக்கல்லில் சசிகலாவின் வழக்கறிஞர் செந்தில் உள்ளிட்டோர் வீடுகளில் நடந்த சோதனை நிறைவு அடைந்துள்ளது.


Next Story