ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி அருகே ஆட்டோ மீது கார் மோதல்; ஒருவர் பலி


ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி அருகே ஆட்டோ மீது கார் மோதல்; ஒருவர் பலி
x
தினத்தந்தி 12 Nov 2017 11:05 AM IST (Updated: 12 Nov 2017 11:04 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி அருகே குடிபோதையில் கார் ஓட்டி ஆட்டோக்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்தியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சென்னை,

சென்னையில் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி அருகே சாலையோரம் நின்றிருந்த 4 ஆட்டோக்கள் மீது கார் ஒன்று மோதி விபத்து ஏற்படுத்தியது. காரில் இருந்த 5 பேரும் குடிபோதையில் இருந்துள்ளனர்.

கார் மோதியதில் ஆட்டோவில் இருந்த ஓட்டுநர் ராஜேஷ் பலியானார்.  இந்த சம்பவத்தில் 5 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்தினை ஏற்படுத்திய வழக்கில் காரில் இருந்த 5 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


Next Story