20 போலி நிறுவனங்கள் தொடங்கி கோடிக்கணக்கில் பண பரிமாற்றம் விவேக் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் அம்பலம்
கோடிக்கணக்கில் பணம் பரிமாற்றம் நடந்தது விவேக் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரிசோதனையின் மூலம் தெரிய வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,
பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் போது 20 போலி நிறுவனங்கள் தொடங்கி கோடிக்கணக்கில் பணம் பரிமாற்றம் நடந்தது விவேக் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரிசோதனையின் மூலம் தெரிய வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
சசிகலாவின் அண்ணன் மகன் விவேக். ஜெயா தொலைக்காட்சியின் தலைமை செயல் அதிகாரியாக உள்ளார். இவருடைய வீடு சென்னை கோடம்பாக்கம் ராமநாதன் தெருவில் உள்ளது.
இந்தவீடு கடந்த 9-ந்தேதி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் கண்காணிப்புக்குள் கொண்டு வரப்பட்டது. வீட்டின் வெளியே துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வந்தனர். வருமான வரித்துறை கூடுதல் கமிஷனர் ஜெயராகவன் நேரடி கண்காணிப்பில் சோதனை நடத்தப்பட்டு வந்தது.
விவேக் பெயரில் உள்ள சொத்து பட்டியல், வங்கி கணக்குகள் மற்றும் முதலீடுகள் போன்ற ஆவணங்களை மலைபோல் குவித்து வைத்து, அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் போது, வங்கிகளில் செய்யப்பட்ட பண பரிமாற்றங்கள் குறித்த விவரங்களை தனிக்கவனத்துடன் சரி பார்த்தனர்.
விவேக்கிற்கு சொந்தமான நிறுவனங்களில் வருமானத்துக்கு ஏற்ப வருமான வரி முறையாக செலுத்தப்பட்டு வருகிறதா? என்பது குறித்த ஆவணங்களையும் அதிகாரிகள் அலசி ஆராய்ந்தனர்.
விவேக் வீட்டில் நேற்று 4-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நீடித்தது. அதிகாரிகள் வருவதும், போவதும் என்று இருந்ததால், விவேக் வீடு அமைந்த பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.
சோதனை முடிந்தவுடன் விவேக் நிருபர்களை சந்தித்து பேட்டி அளிப்பார் என்றும் தகவல் உலா வந்தது.
இதையடுத்து விவேக் வீட்டின் முன்பு காலை முதலே பத்திரிகை, தொலைக்காட்சி நிருபர்கள் குவிந்திருந்தனர். ஆனால் சோதனை நிறைவடையவில்லை. அவருடைய வீட்டில் நேற்று இரவு 9.30 மணி வரை வருமான வரித்துறை சோதனை நீடித்தது.
வருமான வரிசோதனை நடக்கும்போது, வீட்டில் இருப்பவர்களை வெளி நபர்கள் சந்திக்க அனுமதி மறுக்கப்படுகிறது. செல்போனில் பேசுவதற்கும் தடை விதிக்கப்படுகிறது.
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் விவேக்கின் மனைவி கீர்த்தனாவின் பிறந்தநாளையொட்டி, வாழ்த்து தெரிவிக்க வந்த அவருடைய தந்தை பாஸ்கர், தாயார் ஜெயா, சகோதரர் ரிஷி மற்றும் உறவினர்கள் வாசலிலே தடுத்து நிறுத்தப்பட்டனர். கீர்த்தனாவை பார்க்க அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் சோகத்துடன் திரும்பி சென்றனர்.
இந்தநிலையில் விவேக் வீட்டில் நேற்று வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றுவிடும் என்று தகவல் வெளியானதால், மகள் கீர்த்தனாவை பார்ப்பதற்காக அவருடைய தந்தை பாஸ்கர், சகோதரர் ரிஷி ஆகியோர் காலையிலேயே வந்து காத்திருந்தனர். கீர்த்தனாவை பார்த்துவிட்டு தான் திரும்பி செல்ல வேண்டும் என்ற ஆசையில் வீட்டின் நுழைவுவாயிலேயே காத்து இருந்தனர்.
அதிகாரிகளின் அனுமதியுடன் இரவு 8.45 மணியளவில் பாஸ்கர் மற்றும் அவருடைய மனைவி ஜெயா ஆகியோர் விவேக் வீட்டின் உள்ளே சென்றனர்.
விவேக் வீட்டில் நடத்தப்பட்ட சோதனை பற்றி வருமான வரித்துறை வட்டாரங்கள் கூறியதாவது:-
கருப்பு பணத்தை ஒழிக்கும் முயற்சியாக மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் 8-ந்தேதி பணமதிப்பு நீக்க நடவடிக்கையை எடுத்தது. புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் திரும்ப பெறப்பட்டன.
அப்போது கோடிக்கணக்கில் வங்கிகளில் யார், யார் பண பரிமாற்றம் செய்தனர் என்பதை வருமான வரித்துறை அதிகாரிகள் ரகசியமாக கண்காணித்தனர். அதன் அடிப்படையிலே தற்போது விவேக் வீடு மற்றும் அவருடைய பெயரில் உள்ள நிறுவனங்கள், அலுவலகங்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி இருப்பது தெரிய வந்தது.
தற்போது விவேக் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், பல முக்கிய ஆவணங்கள் அதிகாரிகள் கையில் சிக்கி உள்ளது. அதில், பண மதிப்பு நீக்க நடவடிக்கையின்போது, மத்திய அரசு திரும்ப பெற்ற ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை கோடிக்கணக்கில் 100 வங்கி கணக்குகள் மூலம் மாற்றியதற்கான ஆவணங்களும், இதற்காக 20 போலி நிறுவனங்கள் தொடங்கப்பட்டிருப்பதற்கான ஆவணங்களும் விவேக் வீட்டில் இருந்து கிடைத்துள்ளது. மேலும் இதுதொடர்பான ஆவணங்கள் சென்னை தியாகராயநகர் அபிபுல்லா சாலையில் உள்ள அவருடைய சகோதரி கிருஷ்ணாபிரியா வீட்டிலும் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேற்கண்ட தகவல்களை வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Tags :
Next Story