ஆந்திர அரசின் நந்தி விருது அறிவிக்கப்பட்டுள்ளதற்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி
ஆந்திர அரசின் நந்தி விருது அறிவிக்கப்பட்டுள்ளதற்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னை,
ஆந்திர அரசு, நடிகா் ரஜினிகாந்திற்கு 2016ம் ஆண்டிற்கான என்.டி.ஆா். நேஷனல் விருதையும், கமல்ஹாசனுக்கு 2014ம் ஆண்டிற்கான விருதையும் அறிவித்துள்ளது. இதனையடுத்து நடிகா் கமல்ஹாசன் தனது டுவிட்டா் பக்கத்தில் நந்தி விருது பெற்றுள்ள ரஜினிகாந்திற்கு எனது வாழ்துகளை தொிவித்துக் கொள்கிறேன் என்று தொிவித்துள்ளாா்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் ஆந்திர அரசின் நந்தி விருது அறிவிக்கப்பட்டுள்ளதற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
என்.டி.ஆர் தேசிய விருதுக்கு என்னை தேர்வு செய்த ஆந்திர அரசுக்கு நன்றி.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
I convey my heartfelt thanks and happiness for the prestigious #NandiAwards granted to me 🙏🏻
— Rajinikanth (@superstarrajini) November 14, 2017
Related Tags :
Next Story