காற்றழுத்த தாழ்வு மண்டலம் வெகுதொலைவில் உள்ளதால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை- சென்னை வானிலை மையம்
காற்றழுத்த தாழ்வு மண்டலம் வெகுதொலைவில் உள்ளதால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என சென்னை வானிலை மையம் அறிவித்து உள்ளது.
சென்னை
சென்னை வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக மாறி மசூலிப்பட்டினம் அருகே இருப்பதால் தமிழகத்திற்கு மழை பாதிப்பில்லை . இதனால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை. காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகத்தில் இருந்து வெகு தொலைவில் உள்ளதால் எந்த பாதிப்பும் இல்லை .அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழைபெய்ய வாய்ப்பு உள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் . சென்னையில் குறிப்பிடத்தகுந்த மழை இருக்காது, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story