சிறையில் உள்ள சசிகலா- இளவரசியிடம் விசாரணை வருமான வரித்துறை தீவிரம்

சிறையில் உள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரிடமும் விசாரணை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பெங்களூர்
வருமானவரித்துறை சோதனையை சட்டப்படி எதிர்கொள்வது குறித்து பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் வழக்கறிஞர்களுடன் சசிகலா ஆலோசனை நடத்தியுள்ளார்.
தமிழகத்தில் சசிகலா உறவினர்களின் இல்லம் மற்றும் நிறுவனங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். ஜெயா டிவி, நமது எம்.ஜி.ஆர் நாளிதழ், ஜாஸ் சினிமாஸ், ஜெயா டிவி சிஇஓ விவேக் வீடு மற்றும் அலுவகங்கள், தினகரன் வீடுகள், திவாகரன் வீடுகள் உள்ளிட்ட 187 இடங்களில் ஒரே சமயத்தில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக 6 வருமான வரித்துறை அதிகாரிகளின் தலைமையில் 1,800 அதிகாரிகள் பயன்படுத்தப்பட்டனர்.
5 நாள் சோதனையில் சிக்கிய பல சொத்து ஆவணங்களில், சசிகலா ஒரு பங்குதாரராக இருப்பதை வருமான வரி துறை அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர்.
இது தவிர மன்னார்குடி குடும்பத்தினர் நடத்தும் பல்வேறு நிறுவனங்களிலும் சசிகலாவுக்கு தொடர்பு இருக்கிறது. எனவே அடுத்தக் கட்டமாக சசிகலாவையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர வேண்டிய நிர்ப்பந்தம் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக சமீபத்தில் நடந்த சொத்துக்கள் மாற்றம்தான் சசிகலா மீதான பிடியை இறுகச் செய்துள்ளது. கடந்த மாதம் சசிகலா பெங்களூர் சிறையில் இருந்து 5 நாட்கள் பரோல் பெற்று, சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற தனது கணவர் நடராஜனை பார்க்க வந்தார்.
அப்போது அவர் தியாகராய நகரில் உள்ள இளவரசியின் மகள் கிருஷ்ண பிரியா வீட்டில் தங்கியிருந்தார். அந்த சமயத்தில் சசிகலா தன் பெயரில் இருந்த 622 சொத்துக்களை மற்றவர்கள் பெயருக்கு மாற்றியதாக கூறப்படுகிறது. இதற்காக மறுபத்திரப்பதிவு நடத்தப்பட்டதாம்.
வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றிய ஆவணங்கள் மூலம் சசிகலா சொத்துக்கள் மாற்றம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து கோர்ட்டில் அனுமதி பெற்று சிறையில் உள்ள இளவரசி, சுதாகரன் ஆகியோரிடமும் விசாரணை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் தமிழகத்தில் நடைபெற்ற வருமானவரித்துறை சோதனை தொடர்பாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் வழக்கறிஞர்களுடன் சசிகலா ஆலோசனை நடத்தியுள்ளார். வழக்கறிஞர்கள் அசோகன் மற்றும் மூர்த்திலால் கிருஷ்ணப்பா ஆகியோர் சசிகலாவுடன் 2 நாட்கள் ஆலோசனை நடத்தினர். அதில், வருமானவரித்துறை சோதனையை சட்டப்படி எதிர்கொள்வது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டதாக தெரிகிறது.

Related Tags :
Next Story