டி.டி.வி.தினகரன் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் திடீர் ஆலோசனை
டி.டி.வி.தினகரன் அடையாறில் உள்ள தனது இல்லத்தில் இன்று தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டார்.
சசிகலாவின் தம்பி திவாகரன், உறவினர்கள் டி.டி.வி.தினகரன், இளவரசி யின் மகனும், ஜெயா டி.வி.யின் தலைமை செயல் அதிகாரியுமான விவேக், இளவரசியின் மகள்கள் கிருஷ்ணபிரியா, சகிலா மற்றும் உறவினர்கள் வீடு உள்பட மொத்தம் 187 இடங் களில் இந்த சோதனை நடந்தது. சென்னை மட்டும் அல்லாமல் திருச்சி, தஞ்சை, மன்னார்குடி உள்ளிட்ட நகரங்களில் உள்ள சசிகலா உறவினர் வீடுகளிலும் சோதனை நடந்தது.
இது தொடர்பாக விசாரணைக்காக வருமான வரித்துறை அவர்கள் அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் டி.டி.வி.தினகரன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களையும் சென்னைக்கு வரவழைத்து திடீர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த கூட்டத்தில் தகுதி நீக்கம் செய்யப்படாத மேலும் 3 ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொண்டனர்.
கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களான தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி உள்ளிட்டோரும் தினகரன் வீட்டில் நடைபெற்ற ஆலோசனையில் கலந்து கொண்டனர்.
சசிகலா குடும்பத்தினர் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி முடித்துள்ள நிலையில் தினகரன் திடீரென ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Tags :
Next Story