சென்னை சுங்கத்துறை இணையதளம் திடீர் முடக்கம் பாகிஸ்தானியர்கள் கைவரிசையா?

சென்னை சுங்கத்துறை இணையதளம் திடீர் முடக்கம் பாகிஸ்தானியர்கள் கைவரிசையா?
x
தினத்தந்தி 17 Nov 2017 7:37 PM IST (Updated: 17 Nov 2017 7:37 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் சுங்கத்துறையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் சட்டவிரோதமாக புகுந்து ‘ஹேக்’ (தாக்குதல்) நடத்தி உள்ளனர்.

சென்னை,

சென்னையில் சுங்கத்துறையின் அதிகாரபூர்வ இணையதளத்தில்  சட்டவிரோதமாக புகுந்து ‘ஹேக்’ (தாக்குதல்) நடத்தி உள்ளனர்.

இந்த இணையதளத்துக்குள் புகுந்தவர்கள், அதில் ‘‘காஷ்மீருக்கு விடுதலை வேண்டும்’’ என்ற வாசகத்தை பதிவிட்டனர். அத்துடன் பிரதமர் நரேந்திர மோடிக்கும், இந்திய ராணுவத்துக்கும் எதிரான வாசகங்களையும் அவர்கள் பதிவிட்டுள்ளனர்.

இதை செய்தவர்கள் தங்களை ‘எஸ்எச்11 டீம் பாகிஸ்தான் சைபர் ஸ்கல்ஸ்’ என்று கூறி உள்ளனர். எனவே அவர்கள் பாகிஸ்தானியர்கள் என்று நம்பப்படுகிறது.

இணையதளத்தில் புகுந்து தாக்குதல் நடத்தி இருப்பதை சிறிது நேரத்திலேயே சுங்கத்துறையினர் கண்டுபிடித்து, சரி செய்து விட்டனர்.

சில ஆண்டுகளுக்கு முன்னரும் இதே போன்று சென்னை சுங்கத்துறை இணையதளம் தாக்குதலுக்கு ஆளானது. ஆனால் அதை வேறு ஒரு தரப்பினர் நடத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story