நடராஜனுக்கு தண்டனை விவகாரத்தில் அடுத்தது என்ன?


நடராஜனுக்கு தண்டனை விவகாரத்தில் அடுத்தது என்ன?
x
தினத்தந்தி 18 Nov 2017 5:15 AM IST (Updated: 18 Nov 2017 3:01 AM IST)
t-max-icont-min-icon

சொகுசு கார் இறக்குமதி வழக்கில், ம.நடராஜன், வி.பாஸ்கரன் உள்பட 4 பேருக்கு கீழ் கோர்ட்டு வழங்கிய 2 ஆண்டு சிறை தண்டனையை ஐகோர்ட்டு நேற்று உறுதி செய்துள்ளது.

சென்னை,

இந்த வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டபோது, அதை எதிர்த்து ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்ய நடராஜன் உள்ளிட்டோருக்கு கால அவகாசம் வழங்கப்பட்டது. அதற்காக அவர்களுக்கு சி.பி.ஐ. கோர்ட்டு ஜாமீன் வழங்கியது.

தற்போது, கீழ் கோர்ட்டு வழங்கிய தண்டனையை ஐகோர்ட்டும் உறுதி செய்துவிட்டது. இந்த தீர்ப்பு நகல் சி.பி.ஐ. கோர்ட்டுக்கு சென்றவுடன், குற்றவாளிகளுக்கு எதிராக அந்த கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பிக்கும். இந்த பிடிவாரண்டின் அடிப்படையில், அவர்களை சி.பி.ஐ. போலீசார் கைது செய்யலாம். அல்லது தகவல் அறிந்து குற்றவாளிகளே கோர்ட்டில் சரணடையலாம்.

அப்போது குற்றவாளிகள், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்போகிறோம். அதுவரை ஜாமீன் வழங்க வேண்டும் என்று கேட்டால், அவ்வாறு ஒரு சலுகையை வழங்க சி.பி.ஐ. கோர்ட்டுக்கு அதிகாரம் இல்லை. இதுபோன்ற கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டில்தான் முன்வைக்க முடியும். அதனால், அவர்கள் சிறைக்குள் சென்ற பின்னர்தான், மேல்முறையீடு செய்ய முடியும்.

எந்த கோரிக்கையாக இருந்தாலும், இவர்கள் சுப்ரீம் கோர்ட்டைத்தான் நாடமுடியும். தற்போது சி.பி.ஐ. கோர்ட்டை பொறுத்தவரை, குற்றவாளிகள் தண்டனை காலத்தை அனுபவிக்கும் விதமாக அவர்களை சிறையில் அடைக்க உத்தரவிட மட்டுமே அதிகாரம் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story