காரணம் என்னவாக இருந்தாலும் சோதனை, மனவேதனை அளிக்கிறது: மைத்ரேயன் எம்.பி
காரணம் என்னவாக இருந்தாலும் வருமான வரித்துறை சோதனை மனவேதனை அளிக்கிறது என்று மைத்ரேயன் எம்.பி தெரிவித்துள்ளார்.
சென்னை,
போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்து வந்த வேதா இல்லத்தில் வருமான வரித்துறையினர் நேற்று திடீரென சோதனை நடத்தினர். வருமான வரித்துறை கூடுதல் இயக்குனர் தலைமையில் 10-க்கு மேற்பட்ட அதிகாரிகள் 4 மணிநேரத்திற்கும் மேலாக சோதனையில் ஈடுபட்டனர். நள்ளிரவு இந்த சோதனை முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில், சோதனை குறித்து ஈபிஎஸ் ஓபிஎஸ் ஆதரவு நிலையில் உள்ள எம்.பி மைத்ரேயன் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-காரணம் என்னவாக இருந்தாலும் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வாழ்ந்த போயஸ் தோட்டத்தில் சோதனை என்பது மிகுந்த மன வேதனை அளிக்கிறது. என்னைப் பொறுத்த வரையில் அம்மாவின் இல்லம் ஒரு கோயில்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story