போக்குவரத்து சொத்துக்களை அடமானம் வைத்து தமிழகத்தை ஓட்டாண்டி ஆக்கி விட்டார்கள் பிரேமலதா விஜயகாந்த்


போக்குவரத்து சொத்துக்களை அடமானம் வைத்து தமிழகத்தை ஓட்டாண்டி ஆக்கி விட்டார்கள் பிரேமலதா விஜயகாந்த்
x
தினத்தந்தி 18 Nov 2017 1:00 PM IST (Updated: 18 Nov 2017 12:59 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரேமலதா விஜயகாந்த் போக்குவரத்து சொத்துக்களை அடமானம் வைத்து தமிழகத்தை ஓட்டாண்டி ஆக்கி விட்டார்கள் என கூறினார்.

சென்னை

ரேஷனில் சர்க்கரை விலை உயர்வை கண்டித்து தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:-

தமிழகத்தில் உள்ள பழமையான அரசு கட்டடங்கள் மற்றும் பள்ளிகளை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எம்ஜிஆர் நூற்றாண்டு விழா என்ற பெயரில் மக்கள் வரிப்பணத்தை கோடிக்கணக்கில் வீணடிக்கின்றனர்.

போக்குவரத்து சொத்துக்களை அடமானம் வைத்து தமிழகத்தை ஓட்டாண்டி ஆக்கி விட்டார்கள்.முதலமைச்சர் அனுமதியில்லாமல் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் சோதனை நடந்திருக்காது; வருமான வரி சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையே. சசிகலா குடும்பத்தினர் கொள்ளையடித்தது இப்போது தான் தெரிகிறதா. இவ்வாறு அவர் பேசினார்.

Next Story