மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிய நிதி இதுவரை கிடைக்கவில்லை- தம்பிதுரை குற்றச்சாட்டு


மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிய நிதி இதுவரை கிடைக்கவில்லை- தம்பிதுரை குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 18 Nov 2017 10:51 AM GMT (Updated: 18 Nov 2017 10:51 AM GMT)

போயஸ் தோட்டத்தில் நடைபெற்ற வருமான வரி சோதனை மன வேதனையை தருகிறது என எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் துணை சபாநாயகர் தம்பிதுரை பேசினார்.

சிவகங்கை

சிவகங்கை மன்னர் துரைசிங்கம் கலைக்கல்லூரி மைதானத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தொடங்கியது விழாவில்  முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமி,  துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்   அமைச்சர்கள் மற்றும் துணை சபாநாயகர் தம்பிதுரை பங்கேற்றுள்ளனர்.

விழாவில், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பேசியதாவது:-

போயஸ் தோட்டத்தில் நடைபெற்ற வருமான வரி சோதனை மன வேதனையை தருகிறது .மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிய நிதி இதுவரை கிடைக்கவில்லை. மாநில அரசின் திட்டங்களுக்கு கேட்ட நிதியை மத்திய அரசு தரவில்லை.மாநிலங்களுக்கு அதிக  உரிமைஅக்ளை பெறுவதன் மூலம் தான் திட்டங்களை செயல்படுத்த  முடியும் என கூறினார்.

Next Story