சட்டத்தின் அடிப்படையிலேயே அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது: ஆளுநர் விளக்கம்


சட்டத்தின் அடிப்படையிலேயே அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது: ஆளுநர் விளக்கம்
x
தினத்தந்தி 20 Nov 2017 2:13 PM GMT (Updated: 20 Nov 2017 2:13 PM GMT)

சட்டத்தின் அடிப்படையிலேயே அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை,

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கடந்த வாரம் கோவைக்கு வருகை தந்து ஆட்சியர், அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் வளர்ச்சி பணிகள் பற்றி ஆலோசனை மேற்கொண்டார். ஆளுநர் கோவையில் ஆய்வு செய்கிறார் என சர்ச்சை எழுந்தது. அவருக்கு அதற்கான அதிகாரம் இல்லை என பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின. இந்த நிலையில், ஆளுநர் தரப்பில் இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், சட்டத்தின் அடிப்படையிலேயே அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
“சட்டத்தின் அடிப்படையிலேயே அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. நேரடி ஆய்வை பலர் பாராட்டியுள்ளனர், இதில் அரசியல் உள்நோக்கம் இல்லை. அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படையிலேயே செயல்பட்டிருக்கிறேன். இதில் அரசியல் உள்நோக்கம் எதுவும் கிடையாது.வளர்ச்சிப் பணியில் மாநில அரசுக்கு ஒத்துழைக்கவே ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.கட்டாயப்படுத்தியோ, வற்புறுத்தியோ எந்த கூட்டத்திற்கும் அதிகாரிகளை அழைக்கவில்லை 

 சட்ட நடைமுறைகளுக்கு மாறாக எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. சிறப்பான வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் அறிவுரை வழங்கவே அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடைபெற்றது. அசாமில் ஆளுநராக இருந்தபோதும் இதேபோல் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுள்ளேன்.இதை அங்குள்ள மக்கள் பாராட்டியிருக்கிறார்கள். தமிழகத்தில் இதுபோன்ற ஆய்வுகள் தொடரும். தமிழகத்தில் மேற்கொண்ட ஆய்வுகளை தமிழக அரசும் அமைச்சர்களும் பாராட்டியுள்ளனர். ஆளுநர் இதுபோன்று ஆலோசனை நடத்துவதற்கு எந்த சட்டமும் தடையாக இல்லை” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story