கூடுதல் மணல் குவாரிகளை திறக்க அரசு முடிவு எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை
டெல்டா மாவட்டங்களில் கூடுதல் மணல் குவாரிகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை,
தமிழகத்தில் மணல் குவாரிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் மாநிலம் முழுவதும் மணல் தேவை அதிகமாக உள்ளது. எனவே கூடுதலாக மணல் குவாரிகளை திறப்பதற்காக கடந்த ஜூன் மாதம் தமிழக அரசு முடிவு செய்திருந்தது. இதற்காக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் அனுமதியும் கோரப்பட்டு உள்ளது.
கூடுதல் மணல் குவாரிகளை திறப்பது குறித்த ஆலோசனை கூட்டம், தலைமைச் செயலகத்தில் நேற்று முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், கரூர், நாமக்கல் உள்பட 8 மாவட்டங்களை சேர்ந்த கலெக்டர்கள் கலந்துகொண்டனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் தேவையை பொறுத்து 3 முதல் 7 மணல் குவாரிகளை திறக்க அரசு முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.
Related Tags :
Next Story