556 சிறப்பு மருத்துவர், 175 இளநிலை உதவியாளருக்கு பணி நியமன ஆணைகள் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்


556 சிறப்பு மருத்துவர், 175 இளநிலை உதவியாளருக்கு பணி நியமன ஆணைகள் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்
x
தினத்தந்தி 22 Nov 2017 4:00 AM IST (Updated: 22 Nov 2017 1:10 AM IST)
t-max-icont-min-icon

556 சிறப்பு மருத்துவர், 175 இளநிலை உதவியாளருக்க பணியாளர் தேர்வு வாரியங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 556 சிறப்பு மருத்துவர், 175 இளநிலை உதவியாளருக்கு பணி நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். பணி நியமன ஆணைகள் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

சென்னை,

தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் மருத்துவர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. அவர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கி பேசியதாவது:-

வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் மட்டும்தான் இந்தியாவிலேயே முதன்முறையாக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறைக்காக தனியாக மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் கடந்த 2012-ம் ஆண்டு தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இவ்வாரியத்தின் மூலம் மக்கள் நல்வாழ்வுத் துறையில் ஏற்படும் காலிப் பணியிடங்களை நிரப்ப, ஆண்டு முழுவதும் ஒரு கால அட்டவணையை நிர்ணயித்து, சுழற்சி முறையில் தேர்வுகள் நடத்தி, தகுதி அடிப்படையில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த பிற பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. இந்த வாரியத்தால் இதுவரை 10 ஆயிரத்து 858 மருத்துவர்கள் மற்றும் சிறப்பு மருத்துவர்கள் 9 ஆயிரத்து 533 செவிலியர்கள் மற்றும் இதர மருத்துவப் பணியாளர்கள் உள்பட 23 ஆயிரத்து 466 பணியாளர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக தற்போது மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தால் தெரிவு செய்யப்பட்டுள்ள 556 சிறப்பு மருத்துவர்கள் மற்றும் தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட 175 இளநிலை உதவியாளர்கள், 49 தட்டச்சர்கள் மற்றும் 7 சுருக்கெழுத்து தட்டச்சர்கள் ஆகியோருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.

இன்று பணி நியமன ஆணை வழங்கப்பட்ட 556 சிறப்பு மருத்துவர்களுடன் சேர்த்து, இந்த ஆண்டு மட்டும் தமிழக அரசால் 721 சிறப்பு மருத்துவர்களுக்கும், ஆயிரத்து 329 மருத்துவர்களுக்கும் என மொத்தம் 2 ஆயிரத்து 50 மருத்துவர்களுக்கு பணிநியமனம் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசில் தமிழகத்திலுள்ள ஆயிரத்து 748 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட அனைத்து அரசு மருத்துவ மனைகளிலும், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் 96 சதவீத பணியிடங்களில் மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர். மீதமுள்ள 4 சதவீத மருத்துவர் பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும்.

தமிழ்நாட்டின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் செயல்பாட்டை கருத்தில் கொண்டு ஜப்பானிய வளர்ச்சி நிறுவனம் (ஜைகா), அரசு மருத்துவ மனைகள் மற்றும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளை உலக தரத்திற்கு மேம்படுத்த, 2016-ம் ஆண்டு ஆயிரத்து 634 கோடி ரூபாய்க்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

மேலும், பன்னாட்டு வளர்ச்சி நிறுவனமான உலக வங்கி தமிழ்நாடு சுகாதார திட்டம் 2-க்கு சமீபத்தில் ரூபாய் 2 ஆயிரத்து 685 கோடி நிதி வழங்கிட முதல் கட்ட ஒப்புதல் அளித்துள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story