தி.மு.க.வுடன், டி.டி.வி.தினகரன் கைகோர்த்து இருப்பது அம்பலம் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு
ஜெயா டி.வி.யில் துரை முருகன் பேட்டி கொடுத்தது தி.மு.க.வுடன் டி.டி.வி. தினகரன் கைகோர்த்து இருப்பதற்கு ஒரு உதாரணம் என்று அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டினார்.
சென்னை,
உலக மீனவர் தினத்தையொட்டி சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள சேத்துப்பட்டு பசுமை பூங்காவில் மீன்வளத்துறை சார்பில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தலைமை தாங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மீன் ஏற்றுமதியில் சிறந்து விளங்கிய நிறுவனங்களுக்கு விருது வழங்கப்பட்டது. மீனவர் தினத்தையொட்டி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இடையே நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசு கொடுக்கப்பட்டது. நிகழ்ச்சி முடிந்ததும், அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்
கேள்வி:- ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை டிசம்பர் 31-ந்தேதிக்குள் நடத்தி முடிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளதே?
பதில்:- தேர்தலை கண்டு அஞ்சுகிற இயக்கம் அ.தி.மு.க. கிடையாது. வேட்பாளர் அறிவிப்பு என்பது தலைமைக்கழக ஆட்சி மன்றக்குழுவால் எடுக்கப்படும் முடிவு. அதை பற்றி நான் எதுவும் சொல்ல முடியாது.
கேள்வி- தற்போது உங்கள் வசம் இரட்டை இலை சின்னம் இல்லை, இந்த சமயத்தில் எப்படி தேர்தலை சந்திக்க போகிறீர்கள்?
பதில்:- இந்திய தேர்தல் ஆணையத்தால் விசாரிக்கப்பட்டு எழுத்துப்பூர்வமாக 98 சதவீதம் ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டு இருக்கிறது. முழுமையான அளவுக்கு நியாயம் எங்கள் பக்கம் இருக்கிறது.
கேள்வி:- அணிகள் இணைந்தாலும், மனங்கள் இணையவில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த டாக்டர் மைத்ரேயன் எம்.பி. கருத்து தெரிவித்து இருக்கிறாரே?
பதில்:- கட்சி விவகாரங் களை வெளியில் பேசக்கூடாது. என்னை பொறுத்தவரையில் கருத்து வேறுபாடு இல்லை. ஒருமித்த கருத்தோடு எல்லோரும் சேர்ந்து ஜெயலலிதா கட்டிக்காத்த இயக்கத்தை இழுத்து செல்கிறோம்
கேள்வி:- ஜெயா டி.வி.யில் தி.மு.க. முதன்மை செயலாளர் துரைமுருகனின் பேட்டியை ஒளிபரப்பி இருக்கிறார்களே?
பதில்:- வாழ்நாளில் எங்களுடைய எதிரி தி.மு.க. தான். அப்படி இருக்கும் போது, சட்டமன்றத்தில் ஜெயலலிதாவை மானப்பங்கப்படுத்திய துரைமுருகன் பேட்டியை ஜெயா டி.வி.யில் ஒளிப்பரப்பி இருக்கிறார்கள்.
தி.மு.க.வுடன் அவர்கள் (டி.டி.வி.தினகரன் அணி) கைகோர்த்து இருக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம். ஜெயலலிதாவுக்கு விரோதமான காரியங்களை செய்கிறார்கள்.
கேள்வி:- ராமேசுவரம் மீனவர்கள் மீது இந்திய கடற்படை தாக்குதல் நடத்தவில்லை என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். யார் தான் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியது?
பதில்:- தமிழக அரசு சார்பில் கண்டனம், வருத்தத்தை தெரிவித்து இருக்கிறோம். நடவடிக்கை எடுக்க கடிதம் எழுதப்பட்டு இருக்கிறது. நடுக்கடலில் என்ன நடந்தது என்று நமக்கு தெரியாது. மீனவர்கள் கடலோர பாதுகாப்பு படை மீது புகார் தெரிவித்து இருக்கிறார்கள். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் விசாரணை அமைக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அந்த விசாரணை முடிவுக்கு பிறகு தான் உண்மை தெரியவரும்.
கேள்வி:- கச்சத்தீவு மீட்கப்படாத வரை இதுபோன்ற தாக்குதல் நடத்தப்பட்டு கொண்டு தான் இருக்கும் என்று மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறதே?
பதில்:- கச்சத்தீவை 1974-ம் ஆண்டு தி.மு.க. தாரை வார்த்துவிட்டது. கச்சத்தீவு என்பது ராமேசுவரத்தில் இருந்து 18 கிலோ மீட்டர் தூரத்திலும், தலைமன்னாரில் இருந்து 75 கிலோ மீட்டர் தூரத்திலும், யாழ்ப்பாணத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தூரத்திலும் உள்ளது. அப்படி பார்க்கும் போது நமக்கு அருகில் தான் கச்சத்தீவு இருக்கிறது. எனவே அது நமக்கு தான் சொந்தம். ஜெயலலிதா அதன் அடிப்படையில் தான் வழக்கு தொடர்ந்தார். நம்முடைய வாதத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும்.
இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

Related Tags :
Next Story