தேர்தல் கமிஷனருடன் ஆலோசனை நடத்த ராஜேஷ் லக்கானி டெல்லி செல்கிறார்
இந்திய தலைமை தேர்தல் கமிஷனருடன் ஆலோசனை நடத்துவதற்காக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி டெல்லி செல்கிறார்.
சென்னை,
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேதி தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் கமிஷனருடன் ஆலோசனை நடத்துவதற்காக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி டெல்லி செல்கிறார்.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நேற்று முன்தினம் கருத்து ஒன்றை வெளியிட்டது. டிசம்பர் 31-ந் தேதிக்குள் அங்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கிறோம் என்ற கருத்தை ஐகோர்ட்டு கூறியது. பொதுவாக ஐகோர்ட்டின் கருத்தை உத்தரவாக எடுத்துக்கொள்வதுண்டு.
அந்த வகையில், ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பான நடவடிக்கைகளை இந்திய தேர்தல் கமிஷன் முடுக்கிவிட்டுள்ளது. இடைத்தேர்தல் குறித்து இந்திய தேர்தல் தலைமை கமிஷனருடன் ஆலோசனை நடத்துவதற்காக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி இன்னும் ஓரிரு நாளில் டெல்லிக்கு செல்ல இருக்கிறார்.
டெல்லியில் நடக்க இருக்கும் இந்த ஆலோசனை கூட்டத்தில், இடைத்தேர்தல் தேதி தொடர்பான முடிவு எட்டப்படும் என்று தெரிகிறது. அதன் பின்னர் இடைத்தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் விதிப்படி, இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிட்ட 26 நாட்களில் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும். மேலும், கிறிஸ்துமஸ் தினத்துக்கு முன்பாக தேர்தல் நடத்தி முடிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தொகுதியில் இதுவரை 45 ஆயிரத்து 889 போலி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி, ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 19 ஆயிரத்து 409 ஆகும். அதில், ஆண்கள் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 725; பெண்கள் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 588; மூன்றாம் பாலினத்தவர் 96. தற்போது வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்காக 9 ஆயிரத்து 621 பேர் விண்ணப்பித்துள்ளனர். வரும் 30-ந் தேதி வரை பெயர் சேர்க்கவும், நீக்கவும் வாக்காளர்களிடம் விண்ணப்பம் பெறப்படும்.
ஆர்.கே.நகர் தொகுதியில் 256 வாக்கு சாவடிகள் உள்ளன. வாக்குப்பதிவின்போது யாருக்கு ஓட்டுப்போட்டோம் என்பதை வாக்காளர்கள் அறிந்துகொள்ளும் வகையில் 310 எந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது. சுருக்க திருத்த பணியின்போது சென்னையில் மட்டும் இரட்டை பதிவு, முகவரி மாற்றம், இறப்பு ஆகிய வகைகளில் இதுவரை வாக்காளர் பட்டியலில் இருந்து ஒரு லட்சத்து 50 ஆயிரம் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

Related Tags :
Next Story