3 நாட்களில் தயாரிக்கக் கூடிய சிறிய வகை ராக்கெட் இஸ்ரோ திட்டம்
நானோ வகை செயற்கைகோளின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, 3 நாட்களில் தயாரிக்கப்படும் சிறிய வகை ராக்கெட்டுகளை தயாரிக்க இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது.
சென்னை,
சிறிய வகை அல்லது நானோ வகை செயற்கைகோள்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சிறிய வகை பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. அதற்கான ஆரம்ப கட்ட பணியில் இஸ்ரோ தீவிரமாக இறங்கி உள்ளது.
2018-ம் ஆண்டு இறுதி அல்லது 2019-ம் ஆண்டு தொடக்கத்தில் இந்த வகை ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. ராக்கெட்டுகள் தயாரிக்கும் செலவில் 10-ல் ஒரு பங்காக இந்த சிறிய வகை ராக்கெட் தயாரிப்பு செலவு குறைக்கப்படுவதுடன், 3 நாட்களில் இந்த வகை ராக்கெட்டுகளை தயாரித்து விட முடியும்.
இந்த வகை ராக்கெட் 500 முதல் 700 கிலோ எடை கொண்ட செயற்கைகோள்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது. அத்துடன் சூரியனின் ஒத்திசைவான கோளப்பாதை மற்றும் பூமியின் சுற்றுப்பாதையில் 500 முதல் 700 கிலோ மீட்டர் தூரம் வரை செயற்கைகோளை கொண்டு செல்லும் திறன் படைத்தவையாக இருக்கும்.
பூமி கண்காணிப்பு, வானிலை கண்காணிப்பு மற்றும் உளவுத்துறையின் நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படும் செயற்கைகோள்கள் பூமியின் சுற்றுப்பாதையில் உள்ளன. இந்த வகை ராக்கெட்டை தயாரிக்க ஆகும் செலவு ரூ.150 கோடியாக இருக்கிறது. ஆனால் வெளிநாடுகளில் இது ரூ.500 கோடி வரை இருக்கிறது. 300 டன் எடைக்கொண்ட சாதாரண வகை ராக்கெட்டுடன் ஒப்பிடும் போது சிறிய ராக்கெட் 100 டன் எடை கொண்டதாக இருக்கும்.
மேற்கண்ட தகவலை இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story