ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணையத்தில் மருத்துவக் கல்வி முன்னாள் இயக்குனர், ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி டீன் ஆஜர்
ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணையத்தில் மருத்துவக் கல்வி முன்னாள் இயக்குனர் டாக்டர் விமலா, ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி டீன் டாக்டர் நாராயணபாபு ஆகியோர் நேற்று ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
சென்னை,
ஜெயலலிதா மரணம் தொடர்பாக அரசு டாக்டர்கள் 2 பேருக்கு ஆஜராகி விளக்கம் அளிக்க விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியது. அந்த 2 டாக்டர்கள் யார்? என்ற விவரத்தை விசாரணை ஆணையம் வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
இந்தநிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி டீன் டாக்டர் நாராயணபாபு, மருத்துவக் கல்வி முன்னாள் இயக்குனர் டாக்டர் விமலா ஆகியோர் விசாரணை ஆணைய அலுவலகத்துக்கு நேற்று வந்தனர்.
ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டபோது, மருத்துவக் கல்வி இயக்குனராக டாக்டர் விமலாவும், ஜெயலலிதா மரணம் அடைந்தபோது மருத்துவக் கல்வி இயக்குனராக (பொறுப்பு) டாக்டர் நாராயணபாபுவும் இருந்தனர்.
ஜெயலலிதாவுக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர்கள் குழுவினருடன் இணைந்து அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் குழுவினரும் சிகிச்சை அளித்தனர். அப்போது அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் குழுவினர் ஜெயலலிதாவின் உடல்நிலை, அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை குறித்த விவரங்களை அறிக்கை வாயிலாக மருத்துவக் கல்வி இயக்குனரிடம் சமர்ப்பித்து வந்தனர்.
எனவே அதனடிப்படையில் டாக்டர்கள் நாராயணபாபு, விமலா ஆகியோரிடம் நீதிபதி ஆறுமுகசாமி நேற்று விசாரணை மேற்கொண்டார். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் உள்பட பல்வேறு கேள்விகளை நீதிபதி ஆறுமுகசாமி எழுப்பினார். அதற்கு டாக்டர்கள் நாராயணபாபுவும், விமலாவும் விளக்கம் அளித்தனர்.
விசாரணை முடிந்தவுடன் நீதிபதி ஆறுமுகசாமி அவர்களிடம், ‘விசாரணை சம்பந்தமாக பத்திரிகையாளர்களுக்கு பேட்டியோ, எந்தவித தகவலோ அளிக்கக்கூடாது’ என்று உத்தரவிட்டார். விசாரணை முடிந்து வெளியேவந்த அவர்களிடம் நிருபர்கள் கேள்விகள் கேட்டபோது, ‘விசாரணை நடந்து கொண்டிருப்பதால் அதுதொடர்பாக எதுவும் கூறமுடியாது’ என்று தெரிவித்துவிட்டனர்.
தற்போது டாக்டர் விமலா ஓய்வுபெற்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story