சேகர் ரெட்டி வழக்கை விசாரிக்க ஐகோர்ட்டு நீதிபதி மறுப்பு
சென்னை தியாகராயநகரை சேர்ந்தவர் தொழிலதிபர் சேகர்ரெட்டி. இவரது வீட்டில் கடந்த ஆண்டு வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.
சென்னை,
சென்னை தியாகராயநகரை சேர்ந்தவர் தொழிலதிபர் சேகர்ரெட்டி. இவரது வீட்டில் கடந்த ஆண்டு வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, ரூ.147 கோடி மதிப்பில் பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளும், சுமார் ரூ.34 கோடி மதிப்பிற்கு புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகளும், 178 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.
புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகளை பதுக்கியது தொடர்பாக வருமான வரித்துறை கொடுத்த அறிக்கையின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்து சேகர் ரெட்டி மற்றும் அவரது ஆட்களை சி.பி.ஐ. போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கின் அடிப்படையில், சேகர் ரெட்டி உள்ளிட்டோர் மீது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் மத்திய அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் தனியாக வழக்கு தொடர்ந்தனர்.
இந்த 2 வழக்குகளிலும் சேகர் ரெட்டி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியில் வந்துள்ளனர். இந்த நிலையில், அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் தொடர்ந்துள்ள சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் சேகர் ரெட்டி மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரிக்க விரும்பவில்லை என்றும், இந்த வழக்கை வேறு ஒரு நீதிபதி முன்பு விசாரணைக்கு பட்டியலிட, தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்வதாகவும் நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் உத்தரவு பிறப்பித்தார்.
Related Tags :
Next Story