ஆர்.கே.நகர் தேர்தல் தி.மு.க.வுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு - திருமாவளவன் அறிவிப்பு
ஆர்.கே.நகர் தேர்தல் தி.மு.க. வேட்பாளருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு என கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்து உள்ளார்.
சென்னை
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வருகிற டிசம்பர் 21-ந்தேதி நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் நேற்று அறிவிப்பு வெளியிட்டது. தி.மு.,க வேட்பாளராக மருது கணேஷ் அறிவிக்கபட்டு உள்ளார். இவர் ஏற்கனவே போனமுறை ஆர்.கே. நகர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கபட்டவர் ஆவார்.
தேர்தல் அறிவிப்பு வெளியானதுமே காங்கிரஸ் கட்சியின் ஆதரவு தி.மு.க.வுக்கு தான் என திருநாவுக்கரசர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
தொடர்ந்து மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூன்யன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளும் தி.மு.க.வை ஆதரிக்கின்றன. இதுவரை 6 கட்சிகள் தி.மு.க.வுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளன.
தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தி.மு.க வேட்பாளரை ஆதரிக்க போவதாக கூறி உள்ளது.
இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியதாவது:-
ஸ்டாலின் தொலைபேசி மூலம் ஆதரவு கேட்டதை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி முடிவு எடுத்து உள்ளது. மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைய வேண்டும். இடதுசாரி கட்சிகள் திமுகவுக்கு ஆதரவளிக்க வேண்டும். இவ்வாறு அவர கூறினார்.
Related Tags :
Next Story