ஆர்.கே.நகர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் யார் போட்டி?
ஆர்.கே.நகர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட போவது யார்? என்பது குறித்து ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது.
சென்னை,
ஆர்.கே.நகர் தொகுதி தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் யார் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
அ.தி.மு.க. இரண்டு அணியாக இருந்த போது ஆர்.கே.நகர் தொகுதியில் அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) அணி சார்பில் அவைத்தலைவர் மதுசூதனன் வேட்பாளராக களம் கண்டார். அ.தி.மு.க. (அம்மா) அணியில் டி.டி.வி. தினகரன் போட்டியிட்டார். பிறகு அ.தி.மு.க. (அம்மா) அணியில் இருந்து டி.டி.வி. தினகரனை விலக்கி விட்டு, அ.தி.மு.க. (அம்மா) அணியை எடப்பாடி பழனிசாமி நடத்தி வந்தார்.
தற்போது அ.தி.மு.க. ஒரே அணியாக மாறியுள்ள நிலையில், அ.தி.மு.க. சார்பில் மதுசூதனன் போட்டியிடுவாரா? அல்லது வேறு யாராவது போட்டியிடுவார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதியை பொறுத்தவரை நாடார் சமுதாயத்தை சேர்ந்த வாக்காளர்கள் அதிகம். எனவே, அந்த சமுதாயத்தில் இருந்து ஒருவரை வேட்பாளராக களம் இறக்க கட்சித் தலைமை பரிசீலிப்பதாக தெரிகிறது.
ஆர்.கே.நகர் தொகுதி மண்டல தலைவர் கார்த்திகேயன், முன்னாள் கவுன்சிலர் காளியப்பன் ஆகிய 2 பேரில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
அதே நேரத்தில், வட சென்னை மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளராக உள்ள ராஜேஷ் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்ற பேச்சும் அ.தி.மு.க. வட்டாரத்தில் அடிபடுகிறது. எனவே, இன்னும் ஓரிரு நாட்களில் கட்சியின் ஆட்சிமன்ற குழு கூடி வேட்பாளர் யார் என்பதை தேர்வு செய்ய உள்ளது.

Related Tags :
Next Story