ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ச.ம.க. போட்டி இல்லை


ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ச.ம.க. போட்டி இல்லை
x
தினத்தந்தி 4 Dec 2017 4:00 AM IST (Updated: 4 Dec 2017 12:41 AM IST)
t-max-icont-min-icon

யாருக்கும் ஆதரவு கிடையாது ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ச.ம.க. போட்டி இல்லை சரத்குமார் அறிவிப்பு அளித்துள்ளார்.

சென்னை,

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

2011–ம் ஆண்டில் இருந்து கூட்டணிக் கட்சி என்ற முறையில் அ.தி.மு.க.வை ஆதரித்து சட்டசபை, உள்ளாட்சி, பாராளுமன்ற தேர்தல்களில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் பிரசாரம் மேற்கொண்டுள்ளோம். 2015–ம் ஆண்டில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தோம். அவர் மறைவுக்கு பிறகு முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் நிலைப்பாட்டின்படி, இந்த ஆட்சி நீடிக்க வேண்டும் என்ற அடிப்படையில், அவர் ஆதரித்த டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டோம்.

ஒரே தொகுதியில் முதலில் ‘தொப்பி’ சின்னத்துக்கும், தற்போது ‘இரட்டை இலை’ சின்னத்துக்கும் பிரசாரம் செய்வதற்கு என் மனசாட்சி இடமளிக்கவில்லை. இப்படிப்பட்ட நிறம் மாறும் அரசியலை என் சுயமரியாதையும், தன்மானமும் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே எனது மனசாட்சியின் குரலை மதித்து, இத்தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி தனித்துப் போட்டியிடவோ, வேறு எந்தக் கட்சிக்கும் ஆதரவு அளிக்கவோ போவதில்லை என்று முடிவு செய்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story