தாயை கொன்றவரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு சிறை நண்பர் உள்பட 2 பேரிடம் விசாரணை
தாயை கொலை செய்து விட்டு நகைகளுடன் தலைமறைவான தஷ்வந்தை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக அவரது சிறை நண்பர் உள்பட 2 பேரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பூந்தமல்லி,
காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு அடுத்த மவுலிவாக்கம், மாதா நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் பாபு (வயது 35). இவர், பெருங்களத்தூரில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ஸ்ரீதேவி.
இவர்களுடைய 6 வயது மகள் ஹாசினியை, பிப்ரவரி மாதம் 6-ந் தேதி, அதே அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த தஷ்வந்த் (24) என்ற வாலிபர் கற்பழித்து கொலை செய்தார். பின்னர் சிறுமியின் உடலை அனகாபுத்தூர் அருகே ஒரு இடத்தில் வைத்து எரித்து விட்டார்.
இதையடுத்து மாங்காடு போலீசார் தஷ்வந்தை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். அவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது. கடந்த செப்டம்பர் மாதம் தஷ்வந்த் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்து அவரை சென்னை ஐகோர்ட்டு ஜாமீனில் விடுதலை செய்தது.
இந்த சம்பவத்துக்கு பிறகு அந்த அடுக்குமாடி குடியிருப்பை காலி செய்து விட்டு தஷ்வந்த் அவருடைய தந்தை சேகர் (65), தாயார் சரளா (45) ஆகியோர் குன்றத்தூர், சம்பந்தம் நகர், ஸ்ரீராம் சாலையில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருந்தனர்.
நேற்று முன்தினம் செலவுக்கு பணம் தராத ஆத்திரத்தில் பெற்ற தாய் என்றும் பாராமல் சரளாவை கொலை செய்து விட்டு அவர் அணிந்து இருந்த 25 பவுன் நகைகளை கொள்ளையடித்து விட்டு தஷ்வந்த் தலைமறைவாகி விட்டார்.
இது குறித்து குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையான சரளாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை முடிந்து சரளாவின் உடல் நேற்று அவர்களது உறவினர்கள்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் தலைமறைவாக உள்ள தஷ்வந்தை கைது செய்ய உதவி கமிஷனர் கண்ணன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர்கள் சார்லஸ், கிருஷ்ணகுமார், சங்கர் நாராயணன், சப்-இன்ஸ்பெக்டர் பொற்பாதம் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
இது தொடர்பாக போலீசார் கூறியதாவது:-
கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் சேகர் தனது குடும்பத்துடன் இந்த வீட்டில் வாடகைக்கு வந்தார். சிறுமியை கொன்ற தஷ்வந்த் குடும்பத்தினர்தான் வரப்போகிறார்கள் என்பது தெரியாமலேயே அந்த வீட்டை அதன் உரிமையாளர் வாடகைக்கு கொடுத்து உள்ளார். சேகர், சரளா இருவரும் இந்த வீட்டுக்கு குடிவந்த சில மாதங்களுக்கு பிறகுதான் தஷ்வந்தை இந்த வீட்டுக்கு அக்கம், பக்கத்தினருக்கு தெரியாமல் அழைத்து வந்துள்ளனர்.
அவருடைய தாயார் சரளா கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு பிறகு போலீசார் அங்கு வந்த பின்னர்தான் இந்த காமக்கொடூரன் தஷ்வந்த், அந்த வீட்டில் தங்கி இருப்பது அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு தெரிய வந்துள்ளது.
தஷ்வந்த் வெளியே சென்றால் ஏதாவது பிரச்சினை வந்துவிடும் என்பதால் அவனை வெளியே எங்கும் அனுப்பாமல் அவரது பெற்றோர் வீட்டுக்குள்ளேயே வைத்து இருந்துள்ளனர். தஷ்வந்த் தனக்கு செலவுக்கு பணம் வேண்டும் என்று அடிக்கடி தனது பெற்றோரிடம் கேட்டு தகராறு செய்து வந்துள்ளார்.
சம்பவத்துக்கு முதல் நாள் அவர் தனக்கு ரூ.20 ஆயிரம் வேண்டும் என்று தாயிடம் கேட்டார். அதற்கு அவர், அவ்வளவு பணம் கொடுக்க முடியாது. ரூ.2 ஆயிரம் மட்டும் வாங்கிக்கொள் என்று கூறி உள்ளார்.
தஷ்வந்த் போதைக்கு அடிமையானதுடன், கிண்டியில் குதிரை ரேசுக்கு செல்வது, பெண்களுடன் உல்லாசமாக இருப்பது போன்ற தகாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததால் அவரால் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்க முடியவில்லை. பணத்தேவையும் அதிகமாக இருந்து வந்தது.
நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு வழக்கம் போல் வேலைக்கு புறப்பட்ட தந்தை சேகரை, மோட்டார் சைக்கிளில் அழைத்துச்சென்று பஸ் நிலையத்தில் இறங்கி விட்டு வீட்டுக்கு வந்த தஷ்வந்த் மீண்டும் தனது தாயிடம் பணம் கேட்டார்.
அவர் பணம் இல்லை என்று கூறியதால் ஆத்திரத்தில் வீட்டில் இருந்த இரும்பு கம்பியால் பெற்ற தாய் என்றும் பாராமல் அவரது தலையில் ஓங்கி அடித்து உள்ளார். இதில் மண்டை உடைந்து அதே இடத்தில் சரளா பரிதாபமாக இறந்தார். பின்னர் அவர் அணிந்து இருந்த 25 பவுன் நகையை கழற்றி கொண்டு வீட்டை வெளிப்புறமாக பூட்டி விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டார்.
அவர் கடைசியாக யாருடன் பேசி உள்ளார்? என அவரது செல்போன் அழைப்புகளை வைத்து விசாரித்தபோது செங்குன்றத்தை சேர்ந்த பழைய குற்றவாளி டேவிட் என்பவருடன் அடிக்கடியும், கடைசியாகவும் பேசி உள்ளது தெரிந்தது. இதையடுத்து டேவிட் மற்றும் அவரது நண்பர் ஜேம்ஸ் ஆகிய 2 பேரை அழைத்து வந்து போலீசார் விசாரித்தனர்.
அதில், சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்த் சிறையில் இருக்கும்போது டேவிட்டுடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. சிறையில் இருந்து வெளியே வந்த பிறகும் அவர்களுக்குள் இந்த பழக்கம் நீடித்தது. நேற்று முன்தினம் தாயை கொலை செய்து விட்டு நகையுடன் செங்குன்றம் சென்ற தஷ்வந்த், டேவிட்டை பார்த்து, இது தனது பாட்டியின் நகை. தற்போது செலவுக்கு பணம் தேவைப்படுவதால் அதனை அடகு வைத்து பணம் வாங்கித்தரும்படி கூறி உள்ளார்.
ஆனால் டேவிட் மீது சங்கிலி பறிப்பு வழக்குகள் இருப்பதால் அடகு கடையில் தான் நகையை வைக்க முடியாது என்று கூறி, அவருடைய நண்பர் மணிகண்டன் என்பவரிடம் அந்த நகையை கொடுத்து அனுப்பி வைத்து உள்ளனர்.
நகையை வாங்கிச் சென்ற மணிகண்டன், நீண்ட நேரம் ஆகியும் வரவில்லை. அவர் நகையுடன் மாயமாகி விட்டது தெரிந்தது.
இதற்கிடையில், தாய் சரளா கொலை செய்யப்பட்டு விட்டதாகவும், வீட்டுக்கு போலீசார் வந்து இருப்பதாகவும் அவரது தந்தை சேகர் செல்போனில் கூறியுள்ளார். இதனால் தான் கொலை செய்த சம்பவம் அனைவருக்கும் தெரிந்து விட்டதால் போலீசாரிடம் சிக்காமல் இருக்க தஷ்வந்த் தனது செல்போனை ‘சுவிட்ச் ஆப்’ செய்து விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.
தஷ்வந்த் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். தற்போது நிலவரப்படி அவரது கையில் நகை, பணம் இல்லை. அவர் எடுத்து சென்றுள்ள மோட்டார் சைக்கிளின் பதிவெண் மற்றும் அவரது புகைப்படங்களை அனைத்து சோதனை சாவடிகள் மற்றும் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
தலைமறைவாக உள்ள தஷ்வந்தையும், நகையுடன் மாயமான மணிகண்டனையும் தேடும் பணி நடைபெற்று வருகிறது. சிறுமி ஹாசினி கொலை வழக்கில் சிறையில் இருந்தபோது தஷ்வந்த் அங்குள்ள சில கைதிகளிடம் தகராறு செய்ததால் அவர் தனி சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
கடைசியாக சென்டிரல் ரெயில் நிலையத்தில் தஷ்வந்த் செல்போனில் இருந்து சிக்னல் வந்து உள்ளது. எனவே அவர் ரெயிலில் வெளியூர் தப்பிச்சென்றாரா? என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர்.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
சிறுமியை கற்பழித்துக்கொன்ற காமகொடூரன் தஷ்வந்த், தற்போது பெற்ற தாயையும் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீட்டை பொதுமக்கள் வந்து பார்த்து விட்டு செல்கின்றனர்.

Related Tags :
Next Story